பழகக் கடினமான மனிதர்களையும் நேசிப்பது எப்படி?

By Marimuthu M
Mar 18, 2024

Hindustan Times
Tamil

உலகத்தில் எல்லோரும் 100 விழுக்காடு நிறைவானவர்கள் கிடையாது. எனவே, நம்மைப் போல் பிறர் இல்லையே என வெறுக்காதீர்கள்.

கையாளக் கடினமான ஒருவரிடம் கூட நல்ல பண்புகள் இருக்கும். அதைக் கண்டறிந்து பாராட்டுங்கள்.

மிகவும் கோபமான மனிதர்களைப் பார்க்கும்போது, அவர்கள் எந்தவொரு சூழ்நிலையில்  வாழ்ந்தாரோ என்று அவர் மீது பரிதாபம் தான் படவேண்டும். அவரைப் புறக்கணிக்கக் கூடாது.

 நாமும் சில நேரங்களில் பிறரை காயப்படுத்துகிறோம்; நாமும் சில நேரம் எரிந்து விழுகிறோம். அப்படியிருக்க, மற்றவரை குறைசொல்வது நியாயமில்லை. இது யதார்த்தமான மனநிலை என்பதை உணர வேண்டும்.

மனிதர்கள் சூழ்நிலைக் கைதிகள். அவர்களை அந்த நிலையில் இருந்து புரிந்துகொண்டால் யாரையும் புறக்கணிக்க முடியாது. 

ஒரு கடினமான நபரை நேசிக்க நினைத்தால், அவர் மீது கண்மூடித் தனமாக பரிவு காட்டத் தொடங்குங்கள். அவர் இப்படி செய்தார், அவரது இந்த செயல்கள் சரியில்லை என எடைபோடாதீர்கள். போட்டி போடாதீர்கள்.

 ஒருவரின் செயல்களில் குறைசொல்லி மட்டப்படுத்தி நாம் ஒதுக்கிவிடலாம் என நினைக்காமல், அவர் மீது உள்ளார்ந்த கருணையுடன் செயல்படுங்கள். நீங்கள் பார்க்கும் அன்பினால் அவர்களும் அணுக எளிதானவர்களாக மாறிவிடுவார்கள்.

பூசணி விதை நன்மைகள்