’எளிதாக கர்நாடக ஸ்டைலில் முட்டை வறுவல் செய்வது எப்படி?
- இப்படி முயற்சி செய்து பாருங்க!’
By Marimuthu M May 05, 2025
Hindustan Times Tamil
முட்டை வறுவல் செய்யத்தேவையான பொருட்கள் (மூன்று பேருக்கு): முட்டை – 4 (கொதிக்க வைத்து, ஓட்டினை நீக்கிக்கொள்ளவும்),
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி,
கடுகு – அரை சிட்டிகை,
கறிவேப்பிலை – கைப்பிடி,
பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது),
தக்காளி – 1 (நறுக்கியது)
முட்டை வறுவல் செய்யத்தேவையான பொருட்கள் (மூன்று பேருக்கு): இஞ்சி-பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி,
மஞ்சள் தூள் – அரை மேசைக்கரண்டி,
மிளகாய்த்தூள் – 1 மேசைக்கரண்டி,
மல்லித் தூள் – 1 மேசைக்கரண்டி,
மிளகு தூள் – ¼ மேசைக்கரண்டி,
தேங்காய் துருவல் – 2 மேசைக்கரண்டி,
உப்பு – தேவைக்கேற்ப,
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
முட்டை வறுவல் எளிமையான முறையில் செய்வது எப்படி?: முதலில் முட்டைகளை நீரில் கொதிக்க வைத்து, ஓட்டினை நீக்கிக்கொள்ளவும். விருப்பப்பட்டால், அதை இரண்டாக வெட்டிக்கொள்ளலாம்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின்னர் வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.
வெங்காயம் பொன் நிறமாக மாறியதும், தக்காளியை அதில் சேர்க்கவும். பின் தக்காளி மென்மையாகும் வரை சமைக்கவும்.
அதில் மசாலா தூள்கள் எனப்படும் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித் தூள் அனைத்தையும் சேர்த்து கிளறவும்.
முட்டைகளை எந்த பதத்தில் சேர்ப்பது?:
பின்னர் துருவி வைத்திருந்த 2 மேசைக்கரண்டி அளவிலான தேங்காய் துருவலை, அந்தப் பதத்தில் சேர்த்து 2–3 நிமிடங்கள் வதக்கிக்கொள்ளவும். இப்போது கொதிக்க வைத்து, தோல் நீக்கி எடுத்து வைத்திருந்த முட்டைகளை சேர்த்து மெதுவாக கிளறவும். முட்டையின் மேல் மசாலா நன்கு ஒட்டும்படி சில நிமிடங்கள் வதக்கவும். சிறிது, கொத்தமல்லித்தழையையும் அதில் சேர்த்துக்கொள்ளலாம்.
முக்கியமாக, இது காரமும், மஞ்சளும் கலந்த கலவையாக இருக்கும். தற்போது, கர்நாடகா ஸ்டைலில் சுவையான முட்டை வறுவல் தயார். மேல் பகுதியில் கொத்தமல்லித்தழைகளைத் தூவி சாப்பாட்டிற்குப் பரிமாறலாம்.
மேலும் இந்த முட்டை வறுவலை சாதம், சப்பாத்திக்கு உடன் சேர்த்துச் சாப்பிடும் பொருத்தமான உணவு ஆகும்.
ஆர்த்தி - ஜெயம்ரவி பிரிவிற்கு கெனிஷாதான் காரணம் என ஆர்த்தி கூறிய நிலையில் கெனிஷாவிற்கு கொலை மிரட்டல் வந்துள்ளன