வீட்டிலேயே எளிதாக உருளைக்கிழங்கு கச்சோரி செய்வது எப்படி?

By Marimuthu M
May 15, 2025

Hindustan Times
Tamil

உருளைக்கிழங்கு கச்சோரி செய்யத் தேவையான பொருட்கள்: மாவுக்காக: மைதா – 1.5 கப், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – 2 மேசைக்கரண்டி (மாவிற்குள் கலக்க), தண்ணீர் – தேவைக்கு ஏற்ப (மாவு பிசைய), பூரணத்துக்குள் வைப்பதற்கு செய்ய: உருளைக்கிழங்கு – 3 (நன்கு வேக வைத்து நசுக்கியது), இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி, சீரகம் – 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2 நறுக்கியது,

உருளைக்கிழங்கு கச்சோரி செய்யத் தேவையான பொருட்கள்: மிளகாய் தூள் – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், மல்லித் தூள் – 1 டீஸ்பூன், சாட் மசாலா – அரை டீஸ்பூன் (விருப்பத்திற்கேற்ப), உப்பு – தேவையான அளவு, கொத்தமல்லி – சிறிதளவு நறுக்கியது, எண்ணெய் – 1 மேசைக்கரண்டி பொரிக்க: தேவையான அளவு எண்ணெய் 

உருளைக்கிழங்கு கச்சோரி செய்முறை: ஒரு பெரிய பாத்திரத்தில் மைதா, உப்பு மற்றும் 2 மேசைக்கரண்டி எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மென்மையான மாவாக பிசையவும். பின்னர், அந்த மாவை ஈரத்துணியில் மூடி குறைந்தது 20 நிமிடங்களாகவாது ஊற வைக்கவும்.

அதன்பின், ஒரு வாணலியில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் சீரகம் போட்டு தாளிக்கவும். பின்னர் இஞ்சி-பூண்டு விழுதும், பச்சை மிளகாயும் சேர்த்து வதக்கவும்.

மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி ஒவ்வொன்றையும் சப்பாத்தி போலத் தட்டவும். அதன் மத்திய பகுதியில், தயார் செய்துவைத்து இருந்த சிறிது உருளைக்கிழங்கு பூரிப்பினை வைத்து, அதை சிறிது இறுக்கமாக மூடிய பிறகு கை வைத்து சிறிது தட்டவும். தேவையென்றால் வேகமாகச் சுற்றிப் பரப்பவும்.

இதனைத்தொடர்ந்து, ஒரு வாணலியில் எண்ணெயை நன்றாகக் காயவைத்து, காய்ந்தவுடன் கச்சோரிகளை மிதமான தீயில் பொன்னிறமாக மிதமான அளவிற்கு மொறுமொறுப்பாகப் பொரித்து எடுக்கவும். அடுத்து, ஒரே நேரத்தில் அடுத்தடுத்து பொரித்து எடுக்கவும்.

தற்போது உருளைக்கிழங்கு கச்சோரி தயிர்.  உருளைக்கிழங்கு கச்சோரி சட்னி, தயிர் அல்லது சாஸுடன் சாப்பிட ஏற்றது. தனித்துவமான சிறிது இனிப்பு, சிறிது காரம், சிறிது புளிப்பு ஆகிய அனைத்தும் ஒன்றாக கலந்துவரும் இந்தக் கச்சோரி, இடைப்பட்ட பசியைப்போக்கக் கூடியது.

மன அழுத்தத்தைக் குறைக்க 5 எளிதான யோகாசனங்கள்