வீட்டிலேயே எளிதாக முட்டை ஃபிரைடு செய்வது எப்படி? - எளிய வழிமுறைகள்
By Marimuthu M Mar 23, 2025
Hindustan Times Tamil
முட்டை ஃபிரைடு ரைஸ் செய்யத் தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்,
பல்லாரி வெங்காயம் - 1 நறுக்கியது,
முட்டைக்கோஸ் - சிறிதளவு நறுக்கியது,
முட்டை - 2 ,
தக்காளி - நறுக்கியது அரை பங்கு,
கேரட் - 1 நறுக்கியது,
முட்டை ஃபிரைடு ரைஸ் செய்யத் தேவையான பொருட்கள்: பச்சைப் பட்டாணி(வேக வைத்தது) - கால் டம்ளர் அளவு,
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
கரம் மசாலா - அரை டீஸ்பூன்,
மல்லித்தூள் - அரை டீஸ்பூன்,
மிளகுத்தூள் - தேவையான அளவு
ஒரு தோசை தவாவில் இரண்டு டீஸ்பூன் அளவு நல்லெண்ணெய் சேர்த்துக்கொள்ளவும். எண்ணெய் சூடான உடன் ஒரு நறுக்கிய பெரிய வெங்காயத்தை அதன்மேல் பரப்பிக்கொள்ளவும்.
சிறிதளவு பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ், கேரட், பச்சைப் பட்டாணி, நறுக்கிய பச்சை மிளகாயை மேலே போட்டு வதக்கவும்.
ஒரு அரை தக்காளி, நறுக்கி தவாவில் சேர்த்துக்கொள்ளவும். கூடுதலாக ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி பின் நன்கு வதக்கிக்கொள்ளவும். அடுத்து இரண்டு முட்டைகளை உடைத்து அதில் போடவும். அது மிதமான சூட்டில் வந்தவுடன், அதைத் திருப்பி, பொடி மாஸாக ஆக்கிக்கொள்ளவும்.
பின்னர், இரண்டையும் மிக்ஸ் செய்துகொள்ளவும். இதையடுத்து ஒரு கப் வடித்த சாதத்தை அதில் சேர்த்துக்கொள்ளவும்.
கொஞ்சமாக மிளகாய்த்தூள், கொஞ்சமாக கரமசாலா, சிறிதளவு மல்லித்தூள், கொஞ்சமாக உப்பு, சிறிதளவு மிளகுத்தூள் ஆகியவற்றைப்போட்டு நன்கு கிளறவும். சுவையான முட்டை ஃபிரைடு ரைஸ் தயார்!
கணவன் - மனைவி ரிலேஷன்ஷிப் ஒற்றுமையாக இருக்க என்ன செய்யலாம்?