ருசியான உருளைக்கிழங்கு பட்டாணி குழம்பு செய்வது எப்படி என பார்க்கலாமா?
By Marimuthu M Apr 12, 2025
Hindustan Times Tamil
உருளைக்கிழங்கு பட்டாணி குழம்பு செய்யத் தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 2 ஸ்பூன்,
கடுகு - கால் ஸ்பூன்,
சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி அளவு நறுக்கியது,
உருளைக்கிழங்கு - 1 பெரியது,
பட்டாணி - 100 கிராம்,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
உப்பு, நீர் - தேவையான அளவு
உருளைக்கிழங்கு பட்டாணி குழம்பு செய்முறை:- ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டுக்கொண்டு, கால் ஸ்பூன் கடுகினைப் போடலாம். கடுகு பொரிந்ததும் ஒரு கைப்பிடி சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கிட்டு இருக்கும் சமயத்தில் ஊறவைத்த பட்டாணி மற்றும் நறுக்கிய உருளைக்கிழங்கை கடாயில் போட்டு வதக்க ஆரம்பிக்கலாம்.
சிறிதுநேரத்தில் கால் டீஸ்பூன் மஞ்சள் ஸ்பூன் போடலாம். கொஞ்சம் பெருங்காயத்தூள் போட்டுவிட்டு கிளறிவிட்டுட்டு வேகவைக்கவிட்டுவிடவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் 3 சின்ன வெங்காயத்தை கட் செய்து, ஒரு ஸ்பூன் சீரகம், அதே அளவு மிளகு, ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரகம், 4 பல் பூண்டு, 2 தக்காளி நறுக்கியது, ஒரு டீஸ்பூன் மிளகாய் பொடி, அரை டீஸ்பூன் மல்லிப்பொடி, நீர் சேர்த்து அரைத்து மசாலாபேஸ்ட் தயார் செய்யவும்.
இந்த மசாலா பேஸ்ட்டை கடாயில் இருக்கும் பட்டாணி, உருளைக்கிழங்குடன் ஊற்றிவிடவும். அதில் உப்பு, நீர் சேர்த்து கொதிக்கவிடவும். 10 நிமிடத்தில் உருளைக்கிழங்கு பட்டாணி குழம்பு ரெடி!
கோடை காலத்தில் சில எளிய டிப்ஸ்களை பின்பற்ற சருமத்தில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கலாம். சருமத்தை பேனி காக்க உதவும் சில எளிய டிப்ஸ்களை தெரிந்து கொள்ளலாம்