பரோட்டா சால்னாவை வீட்டிலேயே ருசியாக வீட்டிலேயே செய்வது எப்படி?
By Marimuthu M May 08, 2025
Hindustan Times Tamil
சால்னா செய்யத்தேவையான பொருட்கள்: வெங்காயம் – 2 (நறுக்கியது),
தக்காளி – 2 (நறுக்கியது),
பூண்டு – 5 பல்,
இஞ்சி – 1 இஞ்ச் துண்டு,
மசாலா தூள் – மஞ்சள், மிளகாய், மல்லி (தலா 1 தேக்கரண்டி),
கொத்தமல்லி, புதினா – சிறிது,
தேங்காய் – கால் பகுதி (துருவியது),
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
சால்னா செய்முறை: துருவிய தேங்காய், 1 ஸ்பூன் சோம்பு, சிறிது பட்டை, கிராம்பு, ஏலக்காய், சிறிது வெங்காயம், நீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இந்த தேங்காய் மசாலா தான், சால்னாவின் சுவைக்குக் காரணம்.
ஒரு வாணலியில் எண்ணெய் சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து வெங்காயத்தை சிவக்க வதக்கவும். பின்னர் பூண்டு, இஞ்சி விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
தக்காளி நன்கு மெல்லியதானதும், மசாலா தூள்கள் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
அரைத்த தேங்காய் மசாலாவைச் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி சால்னா மாதிரி குழம்பு தன்மை வரும்படி கொதிக்க விடவும்.
பின் தேவையான உப்பும், நறுக்கிய கொத்தமல்லியும், புதினாவும் சேர்த்து 5 முதல் 10 நிமிடங்கள் மிதமான தீயில் நன்கு கொதிக்க விடவும்.
சால்னா நன்கு ஒட்டுமொத்தமாக கொதித்து வந்ததும் பரோட்டாவுடன் சூடாக பரிமாறவும். செம ருசியாக இருக்கும்.
ஆர்த்தி - ஜெயம்ரவி பிரிவிற்கு கெனிஷாதான் காரணம் என ஆர்த்தி கூறிய நிலையில் கெனிஷாவிற்கு கொலை மிரட்டல் வந்துள்ளன