மிகவும் ருசியான ஜீரா சாதம் மற்றும் வெஜிடபிள் குருமா செய்வது எப்படி என அறிவோமா?

By Marimuthu M
May 05, 2025

Hindustan Times
Tamil

ஜீரா சாதம் செய்யத் தேவையான பொருட்கள்: பச்சரிசி – 1 கப், சீரகம் (ஜீரா) – 1 மேசைக்கரண்டி, நெய் அல்லது எண்ணெய் – ஒன்றரை மேசைக்கரண்டி, தாளிப்பதற்காக கிராம்பு, பட்டை, ஏலக்காய் – தலா 1, உப்பு – தேவைக்கேற்ப, தண்ணீர் – 2 கப்

ஜீரா சாதம் செய்முறை: அரிசியை கழுவி 15 நிமிடங்கள் நீரில் ஊறவைக்கவும். ஒரு கடாயில் நெய் ஊற்றி, முழு மசாலா பொருட்களான கிராம்பு, பட்டை, ஏலக்காய் மற்றும் சீரகம் சேர்த்து வதக்கவும். 

சீரகம் மிதமாக வெந்ததும், அரிசியை சேர்த்து கிளறவும். பின் தண்ணீர், உப்பு சேர்த்து அடுப்பில் மிதமான தீயில் எரியவிட்டு நல்ல பதத்திற்கு சாதம் வந்ததும் அடுப்பினை அணைத்து வைக்கவும்.

வெஜிடபிள் குருமா செய்யத்தேவையானவை: கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி – 1.5 கப் நறுக்கியது, பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது), தக்காளி – 1 (நறுக்கி), இஞ்சி-பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி, மசாலா தூள் (மஞ்சள், மிளகாய், கொத்தமல்லி) – தலா ½ மேசைக்கரண்டி

வெஜிடபிள் குருமா செய்யத்தேவையானவை: தேங்காய் விழுது – ¼ கப், கசகசா – 1 மேசைக்கரண்டி (ஊறவைத்து அரைக்கவும்), எண்ணெய் – ஒன்றரை மேசைக்கரண்டி, உப்பு – தேவைக்கேற்ப, தண்ணீர் – தேவையான அளவு

வெஜிடபிள் குருமா செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும். பின் மசாலா தூள் (மஞ்சள், மிளகாய், கொத்தமல்லி) சேர்த்து கிளறி, நறுக்கிய காய்கறிகளைச் சேர்க்கவும்.

சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிட்டு, பின் தேங்காய் மற்றும் கசகசா விழுதைச் சேர்க்கவும். இந்த கலவை கொதித்துவிட்டால், வெஜிடபிள் குருமா தயார்.

இந்த உணவு ஒரே நேரத்தில் வாசனைமிக்கதாகவும் சீரகம் மற்றும் தேங்காயின் சேர்க்கையால் மிகுந்த சத்துள்ளதாகும். இது உங்கள் வழக்கமான மதிய உணவில் ஒரு சிறந்த உணவாகும்.

சனி பகவான் ஒரு நீதிமான், துலாம் ராசியில் அவர் உச்சம் அடைவார். கும்பம், மகரம் ராசிகளில் அவர் ஆட்சி ஆவார். மேஷ ராசியில் அவர் நீச்சம் அடைவார்.