'தேங்காய் சட்னி வைக்கத்தெரியாதவர்களா நீங்கள்?’: இப்படி செய்துபாருங்க ருசியாக இருக்கும்!
By Marimuthu M
May 08, 2025
Hindustan Times
Tamil
ஒரு தேங்காயை உடைத்து, உள்ளேயுள்ள துண்டுகளைத் துருவி 1 கப் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும்
பச்சை மிளகாய் 2, சிறிதளவு இஞ்சி துண்டு (விருப்பம்போல்) வெட்டிக்கொள்ளவும்.
துருவிய தேங்காய், மிளகாய், இஞ்சி, ஒரு பல் பூண்டு (விருப்பத்திற்கு), உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்
தேவைப்பட்டால் மேலும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக விழுதாக அரைக்கவும்.
கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் மற்றும் ஒரு வரமிளகாய் (விருப்பப்படி) எடுத்துக்கொள்ளவும்.
சிறிய வாணலியில் எண்ணெய்யை சூடாக்கி மேலே கூறிய பொருட்களைச் சேர்த்து தாளிக்கவும்
தாளித்ததை அரைத்த சட்னியில் ஊற்றி நன்கு கலக்கி பரிமாறவும்
ஒரு நாளைக்கு எத்தனை ஸ்பூன் சர்க்கரை சாப்பிடலாம் தெரியுமா.. நிபுணர்கள் விளக்கம்!
க்ளிக் செய்யவும்