மாலை நேரத்துக்கு ஏற்ற ராகி சூப் செய்வது எப்படி என அறிவோமா?
By Marimuthu M Apr 16, 2025
Hindustan Times Tamil
கேழ்வரகு என்னும் ராகி சூப் செய்யத்தேவையான பொருட்கள்:(மூன்று பேர் அளவுக்கு) சின்ன வெங்காயம் -10,
வெள்ளைப்பூண்டு - 6 முதல் 7 பல்,
பீட்ரூட் - 2 நறுக்கியது,
கேரட் - 3 நறுக்கியது,
பீன்ஸ் - 6 நறுக்கியது,
கேழ்வரகு என்னும் ராகி சூப் செய்யத்தேவையான பொருட்கள்:(மூன்று பேர் அளவுக்கு) உப்பு - தேவையான அளவு,
மிளகு - தேவையான அளவு,
கேழ்வரகு அல்லது ராகி - 1 கப்,
புதினா - சிறிதளவு,
நீர் - இரண்டு கப்,
பால் - 100 மி.லி
கேழ்வரகு சூப் செய்முறை: - கேழ்வரகு தினையை நன்றாகக் கழுவி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
பிரஷர் குக்கரில் எண்ணெயைச் சூடாக்கி, எடுத்து வைத்திருந்த வெங்காயம் மற்றும் வெள்ளைப் பூண்டைச் சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின்னர் நறுக்கிய பீட்ரூட், கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகளைச் சேர்த்து 5 நிமிடங்கள் குறைந்த தீயில் தாளித்துவிடவும். பின்னர் உப்பு, மிளகு, சுவைக்கேற்ப புதினாத்தழைகளைச் சேர்த்து 2 நிமிடங்கள் சமைக்கவும்.
அதன்மேல் கழுவி வைத்த கேழ்வரகு தினையைச் சேர்த்து விரைவாகக் கிளறவும். 1 கப் நீர் சேர்த்து, குறைந்த முதல் நடுத்தர தீயில் குக்கரை வைத்து 5 விசில் வரும் வரை சமைக்கவும்.
பின்னர், பிரஷர் குக்கர் குளிர்ந்த பிறகு, கூடுதலாக ஒரு கப் தண்ணீர் மற்றும் பால் சேர்த்து நன்கு கலக்கவும். 15 நிமிடத்தில் சூடான கேழ்வரகு என்னும் ராகி சூப் தயார். அதன்மேல் மிளகுத்தூளைக் கலந்து, அன்புக்குரியவர்களுக்கு கேழ்வரகு சூப்பினைப் பரிமாறவும்.
வீட்டுக்குள்ளேயே ஏசியை ஆன் செய்துவிட்டு குளிர்ச்சியான சூழலில் இருப்பதை அனைத்து வயதினரும் விரும்புகிறார்கள். ஆனால் நீண்ட நேர ஏசியில் இருப்பது சில உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும்