பிரிட்ஜை சரியான முறையில் பயன்படுத்தினால் அதில் வைக்கப்படும் உணவுகள், உணவு பொருள்கள் நீண்ட நேரம் ப்ரஷ்ஷாக இருக்கும்

By Muthu Vinayagam Kosalairaman
Feb 25, 2024

Hindustan Times
Tamil

கெட்டுப்போகும் உணவுகளை குளிர்சாதன பெட்டியில் கசிவு இல்லாத டப்பாவில் அல்லது ஒரு மூடியில் இறுக்கமாக மூடி  வைக்க வேண்டும்

சூடான உணவுகளை சூட்டுடன் பிரிட்ஜில் வைக்க கூடாது. நன்கு ஆறிய பின்னர் பிரிட்ஜில் வைப்பதை கடைப்பிடிக்க வேண்டும் 

பழங்கள் அல்லது காய்கறிகள் என அனைத்தையும் தனித்தனியாக வைக்க வேண்டும். வெட்டப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை திறந்தவாறு வைக்க வேண்டாம்

பிரிட்ஜில் இருக்கும் அழுகலான காய்கறிகள், பழங்களை அகற்றி விட வேண்டும். ஏனென்றால் இவை மற்ற பொருள்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்

நீண்ட நேரம் மின்வெட்டு ஏற்பட்டால், 4 மணி நேரத்துக்குள் பிரிட்ஜில் இருக்கும் உணவுகளை பயன்படுத்த வேண்டும்

எப்போதும் பிரிட்ஜில் வைக்கப்பட்டிருக்கும் பழைய உணவு பொருள்களையே முதலில் பயன்படுத்தவும்

தலைமுடியை ஆரோக்கியமாக வைக்க உதவும் ஜூஸ்கள் எவை என்பதை பார்க்கலாம்