மாமியார் - மருமகள் இடையே அந்நியோன்யத்தை பெருக்குவது எப்படி?

By Marimuthu M
Mar 08, 2024

Hindustan Times
Tamil

 புகுந்த வீட்டின் குறைகளை பிறந்தவீட்டில்  சொல்லக்கூடாது. பிறந்த வீட்டு பெருமைகளை புகுந்த வீட்டில் சொல்லக் கூடாது. 

திருமணமாகி புகுந்த வீட்டுக்கு வந்தவுடன்,  வீட்டின் நடைமுறைகளை மாமியார் ஒவ்வொன்றாகச் சொல்வார். அதை மருமகள்  அதிர்ச்சியாகப் பார்க்கக் கூடாது. 

மருமகள் தெரிந்து வைத்திருந்த சில திறமைகளை, மாமியாருக்குக் கற்றுக் கொடுத்தால் இரு தரப்பிலும் உறவு மேம்படும்

மாமியாரை அமர வைத்து வயிறார பரிமாற வேண்டும் அல்லது சமையல் செய்யும்போது உதவி புரியவேண்டும். அப்போது இருவருக்கும் அன்பு மெல்ல மெல்ல பெருகும்

புதிதாக கணவருடன் சென்று ஏதேனும் வாங்கினால் மாமியார் மருமகளுக்கோ, மருமகள் மாமியாருக்கோ பிடித்த ஏதேனும் பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண்டும்

மாமியார் மருமகளின் நல்ல குணத்தை அவ்வப்போது குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் பாராட்டியும், மருமகள் அத்தையின் நல்ல பண்புகளை பக்கத்துவீட்டார் முன்னிலையிலும் பாராட்டினால் உறவு பலப்படும்

வீட்டுக்குத் தேவையான துணி எடுக்கும்போது மாமியாரை மருமகள் அழைத்துக் கொண்டு சென்று, அவரது ஆலோசனையின் படி எடுத்தால், மாமியாருக்கு மருமகள் மீது நம்பிக்கை பிறக்கும்

மனதில் தைரியம் இருப்பவர்கள் இதனை செய்ய மாட்டார்கள்?