தினமும் நேர்மறையான மேற்கோள்களை நாம் பார்க்கும் இடத்தில் போஸ்டர்களாகவோ, எழுதியோ ஒட்டி வைக்கவேண்டும். இதனால் நம்பிக்கை மேம்படும்.
தினமும் தியானம் செய்வது நேர்மறை எண்ணங்களை உருவாக்க உதவும்
தினமும் பிறருக்கு ஏதாவது உதவி புரிய வேண்டும். பிறருக்கு நன்மைசெய்தால் நேர்மறை எண்ணங்கள் இயல்பாக வரும்.
தினமும் ஏதாவது ஒரு நகைச்சுவையான விஷயத்தில் ஈடுபட்டு சிரிக்க வேண்டும். இதனாலும் நேர்மறை எண்ணங்கள் உருவாகும்.
நம் சிந்தனையில் எந்த ஒரு புதிய வேலையையும் பார்த்துப் பயப்படாமல், ஒரு புதியவேலையைக் கற்றுக்கொள்ளப்போகிறோம் என்னும் நினைத்தால் நேர்மறை எண்ணம் கூடும்
நாம் பழகும் நபர்கள் நமக்கு நல்ல ஆலோசனைகளை தந்து, நமது பிரச்னைகளைத் தீர்க்க உதவும் நபர்களாக இருக்கவேண்டும். இப்படிப்
பட்டவர்களுடன் பழகும்போது நேர்மறை எண்ணங்கள் உருவாகும்
வீட்டினை சுத்தப்படுத்தி ஊதுபத்தி மணத்துடன் இருப்பது, தன்னம்பிக்கை புத்தகங்களை வாசிப்பது ஆகியவை நேர்மறை எண்ணங்களை வளர்க்கும்