கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?

By Marimuthu M
May 15, 2024

Hindustan Times
Tamil

கோபம் நாம் சொல்வதை யாரும் கேட்பதில்லையே எனும் ஆற்றாமையின்போதும், நம்மால் ஒரு விஷயத்தை செய்ய முடியவில்லையே எனும்போதும் வருகிறது.

கோபத்தை கட்டுப் படுத்துவதற்கு முன்பு, நாம் சரியான விஷயங்களுக்காகத் தான் கோபப்படுகிறோமா என்று சிந்தித்தல் நன்று.

நாம் கோபப்படுகிறோம் என்பதை ஒப்புக்கொண்டால் தான், அதில் இருந்து வெளிவருவதை உறுதிசெய்ய முடியும். அதனை ஒப்புக் கொள்ளுங்கள்.

மனிதர்களுடன் அதிகமாகப் பழகுங்கள். அடிக்கடி மனம் மாற்றம் தரும் பயணத்துக்குச் செல்லுங்கள். உலகத்தில் அனைவரிடமும் நெருங்க ஆரம்பித்தால் தான், நம்மிடம் இருக்கும் இறுக்கம் தளரும். கோபம் குறையும். 

தத்துவம் சார்ந்த, நகைச்சுவையான புத்தகங்களைப் படியுங்கள். 

அடுத்தவர்களுடைய கோணத்தில் இருந்தும் யோசியுங்கள், கோபம் குறையும். 

அனுதினமும் உங்களுக்குப் பிடித்த சில விஷயங்களைச் செய்ய நேரம் ஒதுக்குங்கள். அது உங்களை சந்தோஷப் படுத்தும். 

கோபம் வரும்போது நடைப்பயிற்சி செய்யலாம், உடலை இறுக்கமாக வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. 

மறதியைச் சமாளிப்பது எப்படி?