தயக்கத்தைச் சமாளிக்க முதல்படி அது எங்கிருந்து வருகிறது என்பதை புரிந்துகொண்டு செயல்படுவது தான். அது தோல்வியைப் பார்த்த பயமாகவோ, திறமைகள் மீதான சந்தேகமோ என அதனை ஆராய வேண்டும்.
நமக்கு தரப்படும் பணியை மலைபோல் எண்ணாமல், அதைப் பகுதி பகுதியாகப் பிரித்துப் பார்த்து செய்தால் தயக்கம் வராது.
தயக்கத்தினால் பெரும்பாலும் முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது. சிறிய முடிவுகளை நம்பிக்கையுடன் எடுங்கள். அது உங்களது பெரிய முடிவு எடுக்கும் திறனை வளர்க்கும்.
நாம் தயங்கும் ஒரு விஷயத்தில், அந்த துறையில் அனுபவம் வாய்ந்த வழிகாட்டிகளுடன் உரையாடுவது நம் தயக்கத்தை தவிடு
பொடியாக்கும்.
தயக்கத்தை உடைத்து வெற்றியைப் பெற்றுவிட்டோம் என மனதில் காட்சிப்படுத்திப் பார்ப்பது தயக்கத்தை உடைக்க நல்ல வழியாகும்.
தயங்கினால் நாம் இருக்கும் இடத்தில் அப்படியே தான் இருக்க
வேண்டும். வளர்ச்சி
இருக்காது என்பதைப்
புரிந்து
கொள்ள
வேண்டும்.
நம்மிடம் இருக்கும் தோல்வி பயத்தை நீக்கி, ஜெயித்தவர்கள் கதையைக் கேட்டால் தயக்கத்தில் இருந்து விடுபடலாம்.
’மேஷம் முதல் மீனம் வரை!’ 12 ராசிக்காரர்களும் அதிர்ஷ்டமும் யோகமும் கிடைக்க அணிய வேண்டிய ராசிக்கற்கள் இதோ!