தோல்வியில் இருந்து மீள்வது எப்படி?

By Marimuthu M
Nov 15, 2024

Hindustan Times
Tamil

தோல்வி என்பது நம் வாழ்வின் மிகப்பெரிய அங்கம். அதைக் கடக்காமல் யாரும் வென்றவர்கள் கிடையாது என்பதை அறிந்துகொள்ளுங்கள். 

தோல்வியில் இருந்து கற்றுக்கொண்ட அனைத்துப் பாடங்களையும் மனதில் இருத்திக் கொண்டு மீண்டும் முயலுங்கள்.

தோல்வி அடைந்தவுடன் சுணங்கிப் போய் உட்காராமல், வளர்வதற்கான வாய்ப்பைக் கண்டுபிடியுங்கள். 

தோல்வியில் இருந்து மீண்டு வந்தவர்களின் நம்பிக்கை மிக்க பேச்சினைக் கேளுங்கள். 

வாழ்வில் சட்டென தெரியாத ஊருக்குப் பயணப்படுங்கள். தெரியாத மனிதர்களின் அன்பினை நுகருங்கள். 

குழப்பம், கவலை, தோல்வி பயம் ஆகிய எண்ணங்கள் வரும்போது, இது ஏன் நமக்கு வருகிறது என்று நினைக்காமல் இந்த சூழலில் இருந்து மீள்வது எப்படி என யோசியுங்கள்.

 உங்கள் வெற்றியைக் கற்பனை செய்து பாருங்கள். அதற்காக இடைவிடாது முயற்சி செய்யுங்கள். 

நெய் ஏன் பயன்படுத்த வேண்டும் தெரியுமா..! இந்த 6 காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

image credit to unsplash