கணவன் - மனைவி ரிலேஷன்ஷிப்பில் பாசமாக இருப்பது எப்படி?

By Marimuthu M
Dec 09, 2024

Hindustan Times
Tamil

ஒருவரது நற்செயல்களை மனம் திறந்து கணவர் - மனைவி இருவரும் மாறி மாறி பாராட்டுவது அன்புபெருக சிறந்த வழியாகும்.

ஒருவரது விருப்பு வெறுப்புகளைப் பிறர் காதுகொடுத்துக்கேட்க வேண்டும். தன் பேச்சை வாழ்க்கைத்துணை கேட்கிறார் என்றால் நம்பிக்கை துளிர்விடும். 

ஒருவரது விருப்பம் இல்லாமல் இன்னொருவர் தாம்பத்திய உறவில் வற்புறுத்தல் கூடாது

ஒவ்வொரு முடிவும் எடுக்கும்போதும் இருவரும் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கவேண்டும். இது இருவருக்குள்ளும் அன்பை விதைக்கும். 

அலுவலகத்தில் இருக்கும் நபர்களை ஒரு எல்லை தாண்டி, உங்களது பெர்ஷனல் விஷயங்களில் தலையிட அனுமதிக்கக் கூடாது. 

அலுவலக கவலைகளைப் பகிர்ந்தால் ஆறுதல் சொல்லுங்கள். இது இருவருக்கும் இடையே அன்பை அதிகரிக்கும். 

பெட்டில் துவட்டிய துண்டை போடுவது இல்வாழ்க்கைத்துணைக்கு பிடிக்காது என்றால், அது உனக்கு பிடிக்குது இல்லையா என்று அவர் பார்க்கும்போது எடுத்து காயபோடுங்கள். இது மதிக்கும் உணர்வை, துணைக்கு ஏற்படுத்தும். 

பாதங்களை நெய் கொண்டு மசாஜ் செய்வதால் கிடைக்கும் 7 அற்புத நன்மைகள் இதோ!