கணவன், மனைவி இடையே பிரச்னை வராமல் இருக்க செய்ய வேண்டியவை

By Marimuthu M
Jul 16, 2024

Hindustan Times
Tamil

கணவன், மனைவியின் பாஸிட்டிவ் ஆன விஷயங்களை அதிகம் பேசுங்கள். மனைவி கணவனின் பாஸிட்டிவ் ஆன விஷயங்களை அதிகம் பேசுங்கள்

வீட்டுக்குத் தேவையான பொருளை வாங்கும்போது இருவரும் ஆலோசித்து வாங்கவேண்டும். கருத்து வேற்றுமை இருந்தால் அதைத் தள்ளிப்போடலாம்

இல்வாழ்க்கைத் துணை பேசத்தொடங்கும்போது காது கொடுத்து கேட்கத் தொடங்க வேண்டும். அதைக் கண்டு கொள்ளாமல் இருப்பது பிரச்னையைக் கிளப்பும்

அடிக்கடி ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்ள வேண்டும். அது சிறுவிஷயமாகவும் இருக்கலாம்

ஒருவரது குறையை, தங்களது வீடுகளில் மற்றும் சொந்தங்களில் மட்டும் சொல்லவே கூடாது. அது பலப் பிரச்னைகளை உண்டு செய்யும்

காலையில் எழுந்ததும் குட் மார்னிங்கும், இரவில் தூங்கும்போது குட் நைட்டும் சொல்லவேண்டும். இது இவருக்கும் இடையே பிணைப்பினை உருவாக்கும்.

கணவன், மனைவி இடையே பிரச்னை இருந்தால் நீங்கள் மனதில் நினைத்ததை ஒரு கடிதமாக எழுதி, உங்கள் இல்வாழ்க்கைத் துணையிடம் கொடுத்து விடுங்கள். இது  இருதரப்பு எதிர்பார்ப்புகளை புரிந்துகொள்ள உதவும்

யமஹா ஆர்எக்ஸ் 100 அறிந்ததும் அறியாததும்!