உணவு மூலம் பரவும் நோய்கள் பொதுவாக உணவு விஷம் என்றும் அழைக்கப்படுகின்றன. தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், ஒட்டுண்ணிகள் மற்றும் சில இரசாயனங்கள் கலந்த உணவை உண்பதால் உணவு விஷம் ஏற்படுகிறது

By Suguna Devi P
Apr 14, 2025

Hindustan Times
Tamil

உணவு விஷம் சிறிய வயிற்று வலிகள் முதல் உயிருக்கு ஆபத்தான கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் வரை அனைத்தையும் ஏற்படுத்தும்.  உணவு விஷத்தால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், பாதுகாப்பாக இருப்பது முக்கியம்.

உணவு மூலம் பரவும் நோய்களைத் தடுப்பதில் கை சுகாதாரம் மிக முக்கியமான படியாகும். சாப்பிடுவதற்கு முன்பும், கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகும், சமைக்ககும் பொருட்களைத் தொடுவதற்கு முன்பும்  சோப்பு மற்றும் வெந்நீரால் உங்கள் கைகளைக் கழுவுங்கள்.

சமையலறைப் பாத்திரங்கள் மற்றும் பாத்திரங்களை சுத்தமாக வைத்திருங்கள். மாசுபட்ட மேற்பரப்புகளிலிருந்து கிருமிகள் உணவுக்குப் பரவக்கூடும். எனவே, அதை முறையாக சுத்தம் செய்வது அவசியம்.

சரியான வெப்பநிலையில் உணவை சமைப்பது தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை அழிக்க உதவும். உணவு வெப்பமானியைப் பயன்படுத்துவது இந்த நுண்ணுயிரிகள் கொல்லப்பட்டதை உறுதிசெய்யும்.

பழங்கள் மற்றும் காய்கறிகளில் பாக்டீரியா, அழுக்கு, பூச்சிக்கொல்லிகள் போன்றவை உள்ளன. இவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்பு சுத்தமாகக் கழுவ வேண்டும்.

இந்தியாவில் தெரு உணவு மிகவும் பிரபலமானது. ஆனால் இவை சுகாதாரத்தைப் பொறுத்தவரை சமமாக பாதுகாப்பானவை அல்ல. சுத்தமான, சூடான உணவு மற்றும் புதிதாக தயாரிக்கப்பட்ட உணவை வழங்கும் கடைகளைத் தேர்வு செய்யவும்.

உணவு மூலம் பரவும் நோய்களுக்கு சுத்தம் இல்லாத நீர் முக்கிய காரணமாகும். பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணிகளை அகற்ற சூடாக்கிய அல்லது வடிகட்டிய தண்ணீரைப் பயன்படுத்தவும்.

வீட்டுக்குள்ளேயே ஏசியை ஆன் செய்துவிட்டு குளிர்ச்சியான சூழலில் இருப்பதை அனைத்து வயதினரும் விரும்புகிறார்கள். ஆனால் நீண்ட நேர ஏசியில் இருப்பது சில உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும்