பணம் சேமிப்பதற்குமுன் நாம் நம்மை எப்படி எல்லாம் மாற்றிக்கொள்ள வேண்டும்?
By Marimuthu M Aug 17, 2024
Hindustan Times Tamil
ஒரு நாளைக்குப் பலமுறை டீ குடிப்பதைத் தவிர்த்து, காலை மற்றும் மாலை என இருவேளை மட்டும் டீ குடிப்பது நல்லது
வேலைக்குப் போகும்போது சமைத்து எடுத்துக்கொண்டு செல்வது நல்லது. அதைவிடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவது, வெளியில் சென்று சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.
வெளி இடங்களுக்கு
போகும்போது குடிநீர் குடிக்க வாட்டர் பாட்டிலை எடுத்துச்சென்று
விட்டால், வாட்டர்பாட்டில் வாங்கும் செலவு குறையும்
வேலையில் செல்லும்போது என்ன வாங்கப்
போகிறோமோ, அதை மட்டும் பட்டியல்போட்டு எடுத்துக்கொண்டு சென்று, அதை மட்டும் வாங்கவேண்டும். பார்ப்பதை எல்லாம் வாங்கக் கூடாது.
பிராண்டட் பொருட்கள் எல்லாத்துக்கும் தேவை கிடையாது.
வீட்டைவிட்டு வெளியில் சென்றாலே ஆட்டோ, கார் எனச் செல்லாமல் பொதுப்
போக்குவரத்தான பஸ், ரயில் எனப் பயன்படுத்தலாம்
கிரெடிட் கார்டு, ஈ.எம்.ஐ-யில் பொருள் வாங்காமல் சிறுகச்சிறுக சேர்த்து வைத்து பொருள் வாங்கலாம்
Calcium Deficiency : பால் பிடிக்காதவர்களா நீங்கள்! கால்சியச் சத்து கவலை வேண்டாம்! இந்த பழங்கள் போதும்!