ஒருவர் பேசும் விதம் எப்படி இருக்க வேண்டும்?
By Marimuthu M
Jul 19, 2024
Hindustan Times
Tamil
நிறையக் கேள், குறையப் பேசு என்பார்கள். இது எதிர்தரப்பினருக்கு தர்க்கரீதியாகப் பதிலடிக்க உதவும்.
பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் இருப்பதும், பேசக்கூடாத நேரத்தில் பேசுவதும் தவறு. அப்படியிருந்தால் அதைச் சரிசெய்துகொள்ளவேண்டும்
என்ன பேசவேண்டும் என்பதை முன்பே யோசித்து வைத்துக்கொண்டு பேசுவது மிக முக்கியம்
கேட்பவரின் கண்களை நேராகப் பார்த்து பேசுவது நம் தன்னம்பிக்கையை எடுத்துச் சொல்லும்
சுருங்கச்சொல்லி விளங்கவைப்பது பலரையும் ஈர்க்கும். அதேநேரம் மேடையில் மொழி வர்ணனையுடன் பேசலாம்
நம் பேச்சு குறித்து விமர்சனங்களை கேட்டுக்கொண்டு, அதைச் சரிசெய்து கொள்ளும் வகையில் பேசவேண்டும்
பிறரை காயப்படுத்தாமல், உதாசீனப் படுத்தாமல் அன்புடனும் மரியாதையுடனும் ஒருவருக்குப் பதிலளித்துப் பேசுதல் நன்மைதரும்.
நாம் சொல்லும் கருத்துப் பிறருக்கு கடினமான விஷயத்தைத் தரும் என்றால், அதனை நயம்பட அவருக்குப் பிடிக்கும் வகையில் எடுத்துச் சொல்லவேண்டும்
கண்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், பார்வத்திறனை பாதுகாக்கவும் சில பழக்கத்தை முறையாக கடைப்பிடிப்பதன் மூலம் பலன் பெறலாம்
க்ளிக் செய்யவும்