காளான் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்தில் கிடைக்கும் நன்மைகள், சத்துகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்
By Muthu Vinayagam Kosalairaman Mar 02, 2024
Hindustan Times Tamil
ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளில் ஒன்றாக காளான் உள்ளது. கொழுப்புகள் இல்லாமலும் குறைந்த அளவில் சோடியம் கொண்டவையாகும், குறைவான கலோரிகளுடன் கொலஸ்ட்ரால் இல்லாமலும் இருக்கிறது
நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் ஏராளமாக கொண்டவையாக காளான்கள் இருக்கின்றன
காளான்களில் இடம்பிடித்திருக்கும் செலினியம் ஆன்டிஆக்சிடன்ட்களுக்கான ஆதாராமாக திகழ்கிறது. ப்ரீ ரேடிக்கல் பாதிப்புகளுக்கு எதிராக செயல்பட்டு நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்த உதவுகிறது
ஆயிஸ்டர், ஷிட்டேத் போன்ற காளான் வகைகளில் பீட்ட க்ளுகன்ஸ், கரையக்கூடிய நார்ச்சத்து இடம்பிடித்திருக்கின்றன. இவை இதய ஆரோக்கியம், டைப் 2 டயிபிடிஸ் பாதிப்பின் அபாயத்தை குறைக்கிறது
வைட்டமின் பி தேவையை பூர்த்தி செய்கிறது. காளான்களில் இடம்பிடித்திருக்கும் ரிபோபிளேவின், நியாசின், போந்தோதெனிக் அமிலம் போன்றவை இதய ஆரோக்கியம், சிவப்பு ரத்து அணுக்கள், செரிமான அமைப்பு, சருமம், நரம்பு அமைப்புகளுக்கு நன்மை தருவதாக உள்ளது
நாளொன்று தேவைப்படும் காப்பர் சத்துகளில் மூன்றில் ஒரு பங்கு சமைத்த காளான்களிலும் உள்ளது. இவை சிவப்பு ரத்த அணுக்கள் உருவாக்கத்தில் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிப்பதோடு, எலும்புகள் ஆரோக்கியம், நரம்புகள் பராமரிப்பிலும் பங்காற்றுகிறது
போர்டோபெல்லோ போன்ற காளான் வகை ஒரு வாழைப்பழத்தின் மூலம் கிடைக்கும் பொட்டாசியம் சத்துகளுக்கு இணையாக அதே சத்துக்களை கொண்டிருக்கிறது. இவை இதயம், தசை, நரம்பு செயல்பாட்டுக்கு உறுதுணையாக திகழ்கிறது
தினமும் ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!