உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு நன்மைகள் தரும் பெர்ரி வகைகளில் ஒன்றாக இருந்து வரும் கிரான்பெர்ரி உடலின் முக்கிய உறுப்புக்கு பாதுகாப்பு அரணாக செயல்படுகிறது. கிரான்பெர்ரி தமிழில் குருதிநெல்லி என்று அழைக்கப்படுகிறது

By Muthu Vinayagam Kosalairaman
May 07, 2025

Hindustan Times
Tamil

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, பரம்பரை பிரச்னைகள் அல்லது அதிகப்படியான நச்சு நுகர்வு போன்ற காரணங்கள் சிறுநீரகங்கள் மோசமடைய வழிவகுக்கின்றன. உடலில் இருந்து நச்சுகளை வடிகட்டுவதில் சிறுநீரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன சில உணவுகளை உணவில் சேர்ப்பது சிறுநீரகம் மற்றும் சிறுநீரக பிரச்னைகளைத் தடுக்கின்றன

சிறுநீரக செயல்பாட்டை இயற்கையாகவே மேம்படுத்த உதவும் பழ தேநீராக குருதிநெல்லி என்று அழைக்கப்படும் கிரான்பெர்ரி டீ உள்ளது. சிறுநீரக கற்கள் உருவாவதை தடுப்பது முதல் நச்சு நீக்கம் வரை இதில் இருக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்

குருதிநெல்லியில் உள்ள சேர்மங்கள் இயற்கையான அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளன, அவை சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர் பாதையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்த உதவுகிறது

குருதிநெல்லி டீ இயற்கையாகவே கலோரிகளில் குறைவாகவும், மெல்லிய இயற்கையான இனிப்பு சுவையுடன் உள்ளது. இது நீண்ட கால பயன்பாட்டுக்கும் சர்க்கரை மற்றும் சிறுநீரக நோய் பாதிப்பு நோயாளகளுக்கு பாதுகாப்பான ஆரோக்கிய மாற்றாக அமைகிறது

இனிக்காத உலர்ந்த பெர்ரிகளிலிருந்து தயாரிக்கப்படும் குருதிநெல்லி டீ சிறுநீரக கற்கள், குறிப்பாக மீண்டும் மீண்டும் ஏற்படும் தொற்றுகளால் ஏற்படும் ஸ்ட்ருவைட் கற்கள் உருவாவதைக் குறைக்க உதவும். சிறுநீர் பாதையை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம், இது போன்ற சிக்கல்களின் வாய்ப்புகளைக் குறைக்கிறது

குருதிநெல்லி டீ லேசான டையூரிடிக் மருந்தாக செயல்படுகிறது. இது உடலை அதிகப்படியான திரவங்கள் மற்றும் நச்சுகளை சிறுநீர் வழியாக வெளியேற்ற ஊக்குவிக்கிறது. அதிகரித்த சிறுநீர் ஓட்டம் கல் உருவாகும் அபாயத்தை குறைப்பதன் மூலம் சிறுநீரக செயல்பாட்டை ஆதரிக்கிறது

இயற்கையாகவே அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன, இந்த சிறிய பெர்ரிகளில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளன, இது நோய் எதிர்ப்பு சக்தி, சரும ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது மற்றும் செல் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது

ரத்த உறைதலுக்கு முக்கியமான வைட்டமின் K1, வளர்சிதை மாற்றம் மற்றும் எலும்பு ஆரோக்கியத்துக்கு அவசியமான நார்ச்சத்து, மாங்கனீசு உள்ளன. இதிலுள்ள ஃபிளாவனாய்டுகள், புரோ அந்தோசயனிடின்கள் போன்ற உயிரியல் ரீதியாக செயல்படும் தாவர சேர்மங்கள் சிறுநீர் பாதையை பாதுகாக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன

சனி பகவான் ஒரு நீதிமான், துலாம் ராசியில் அவர் உச்சம் அடைவார். கும்பம், மகரம் ராசிகளில் அவர் ஆட்சி ஆவார். மேஷ ராசியில் அவர் நீச்சம் அடைவார்.