திருச்சி குமரேசன் துரைசாமி எப்படி நெப்போலியனாக மாறினார் என்பது குறித்து நெப்போலியன் பேசி இருக்கிறார்.
By Kalyani Pandiyan S Nov 12, 2024
Hindustan Times Tamil
இது குறித்து மிஸ்டர் கலாட்டா யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கும் அவர், “ என்னுடைய வீட்டில் மொத்தம் ஆறு பேர். மூத்தவர் அக்கா அதன் பின்னர் அண்ணன், அதன் பின்னர் இரண்டு அக்காக்கள். அதன் பின்னர் நான்; அதன் பின்னர் என்னுடைய தம்பி. நான் என்னுடைய வீட்டில் ஐந்தாவது பிள்ளை.
என்னுடைய அப்பா வைத்த பெயர் குமரேசன் குருநாதர் பாரதிராஜாவின் அறிமுகம் கிடைத்தது. அவர் மூலமாக சினிமாவில் அறிமுகமானேன். இயக்குநர் எப்போதுமே ஆர் வரிசையில்தான், தான் அறிமுகப்படுத்தும் கலைஞர்களுக்கு பெயர் வைப்பார்.
இந்த நிலையில் அவர் என்னிடம், ஆர் வரிசையில் ஒரு 25 பெயர்களை எழுதிக் கொண்டு வா, அதில் உனக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்பதை நான் முடிவு செய்கிறேன் என்று கூறி அனுப்பி வைத்தார்.
நெப்போலியன் என்பது ஒரு கிறிஸ்தவ பெயர். நாம் அடிப்படையில் நாம் ஒரு ஹிந்து. அப்படி இருக்கும் பொழுது குடும்பத்தினர் அந்த பெயரை ஒத்துக் கொள்வார்களா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது.
பெயர் வைத்த உடன் அவர் என்னிடம், உனக்கு நான் வைத்த பெயர் உனக்கு பிடிக்கவில்லையா என்று கேட்டார். அதற்கு நான் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.. நீங்களாக பார்த்து எந்த பெயரை வைத்தாலும், ஓகே தான் சார் என்று நான் சொல்லி விட்டேன்" என்று பேசினார்.
அல்லு அர்ஜூன் 14 நாள்கள் நீதிமன்ற காவலில் இருக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.,