திருமணத்திற்கு முன் மணமக்கள் மனதளவில் தயார் ஆவது எப்படி?

By Marimuthu M
Feb 28, 2024

Hindustan Times
Tamil

 திருமணத்திற்கு முன் ஆணும், பெண்ணும் வெவ்வேறு சூழலில் பிறந்து வளர்ந்தவர்கள்; எனவே, வெவ்வேறு குடும்பங்களின் கலாசாரத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும்

சகிப்புத் தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். நமக்குப் பிடிக்காத சில விஷயங்களைக் கூறினாலும் அதைப் பொறுமையாகக் கேட்டு, அதில் மாற்றுக்கருத்து இருந்தால் நாசூக்காக சொல்லப் பழகவேண்டும்

 நமக்குப் பிடிக்காத விஷயங்களை நம் வருங்காலத்துணை மாற்றிக்கொள்ளும்போது, அவர்களுக்குப் பிடிக்காத விஷயங்களை நாமும் மாற்றிக் கொள்ள முயல வேண்டும்

கணவன் - மனைவி இடையே  உண்மையான அன்பு இருந்தால் சின்னஞ்சிறு விஷயங்களைக் கூட குறையாகப் பார்க்க மாட்டார்கள். எனவே, இருவரும் அன்பு செய்யுங்கள். குறை கண்ணுக்குத் தெரியாது

கணவன் - மனைவி இடையே ஒருவரின் கருத்தினை மற்றவர் காதுகொடுத்துக் கேட்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஈகோவுக்கு இடம்கொடுக்காமல் நியாயம் எனப்பட்டால், நம் பார்வையை மாற்றிக்கொள்வது நல்லது.

கணவன் - மனைவிக்கு இடையே நிகழும் சிறுசிறு பிரச்னைகளை குடும்ப உறுப்பினர்களிடையே ஷேர் செய்யாதீர்கள். அது உறவுகளில் விரிசலை உண்டு செய்யும்

கணவன் - மனைவி பிரச்னைகளில், ரத்த சொந்தங்களைக் கூட நுழையவிடாதீர்கள். அவர்கள் உங்கள் மனதுக்கு ஏற்றபடி பேசி, பிரச்னையை வளர்த்து பெரிதாக்கத்தான் செய்வார்கள்.  நீங்கள் தனியாக அமர்ந்து சிந்தித்துப் பாருங்கள்

இல்லறத் துணையிடம் தவறு செய்தால் அடிக்கடி ஸாரி கேளுங்கள். செய்த உதவிகளுக்கு நன்றி சொல்லுங்கள். 

உங்கள் இல்லறத் துணையை யாருடனும் ஒப்பிடாதீர்கள். மட்டம்தட்டாதீர்கள்- அடுத்தவர்களைப் போல் செலவு செய்ய சொல்லாதீர்கள். 

கணவன் - மனைவி ஆகப் போகும் இருவருக்கும் பணத்தைப் பற்றிய புரிதல் அவசியம் தேவை. எந்த ஒரு பணத்தையும் ஈஸியாகப் பெறமுடியாது என்பதை உணருங்கள். 

சோப்பில் TFM என்றால் என்ன?