வாய்வழி அல்சர் பாதிப்பில் இருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள் எவையெல்லாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
May 03, 2024

Hindustan Times
Tamil

வாய்வழி அல்சர் என்பது பல்வேறு காரணங்கள் ஏற்படும் வலிமிகுந்த புண்களாகும். இதற்கு உரிய சிகிச்சை எடுக்காவிட்டால் எரிச்சல், வலி, சாப்பிடுவதில் சிரமம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்

மருத்துவமனை செல்லாமல் எளிய முறையில் வாய்வழி அல்சர் பாதிப்பை கட்டுப்படுத்தும் வழிகளை பார்க்கலாம்

பேக்கிங் சோடா பேஸ்ட்

சிறிது அளவு பேக்கிங் சோடா எடுத்து அதை தண்ணீருடன் கலந்து பேஸ்ட் ஆக்கி கொள்ள வேண்டும். இதை அல்சர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேய்த்து 10 நிமிடம் வரை ஊற வைக்கவும்.  பின்னர் வாயை நன்கு நீரில் கழுவ வேண்டும். நாள்தோறும் இதை மூன்று முறை வரை செய்யலாம்

தேன்

வாய்வழி அல்சர் பாதிப்பு காரணமாக ஏற்படு வலியை போக்க தேன் பயன்படுத்தலாம். இதில் இருக்கும் நுண்ணுயிர், அழற்சிக்கு எதிரான பண்புகள் வாய்வழி அல்சர் பாதிப்பை ஆற்றுப்படுத்த உதவுகிறது

உப்பு கலந்த நீரில் வாய் கொப்பளித்தல்

வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து அந்த நீரில் வாயில் ஊற்றி நன்கு கொப்பளிக்க வேண்டும். நாள்தோறும் இரண்டு முறை இதை செய்தால் வாய்வழி புற்றுநோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம்

ஆப்பிள் சீடர் வினிகர்

வெதுவெதுப்பான நீரில் ஒரு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும். இதன் மூலம் வாய்வழி அல்சர் பாதிப்பில் இருந்து விடுபடலாம்

நீர் பருகுதல்

வயிற்று பகுதியில் ஏற்படும் சூடு, இரைப்பை குடல் பாதிப்பு, மோசமான குடல் பாதிப்பு போன்றவற்றால் அல்சர் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே வழக்கத்தை விட நீர் பருகும் அளவை அதிகரிப்பதன் மூலம் அல்சர் பாதிப்பை குறைக்கலாம்

மீண்டும் உயரும் தங்கம் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!