சருமத்தை மிருதுவாக்கும் உலர் திராட்சை ஃபேஸ்பேக் செய்முறை இதோ!

Pexels

By Pandeeswari Gurusamy
Jun 25, 2024

Hindustan Times
Tamil

பட்டுப்போன்ற மென்மையான சருமத்தை பெற உலர் திராட்சை பேக் மிகவும் பயன்படும்.

Pexels

எப்போதும் சுத்தமான பளபளப்பான சருமம் வேண்டும் என்பது அனைரின் விருப்பம். மிருவான சருமத்தை பராமரிப்பது நிச்சயமாக எளிதானது அல்ல.

Pexels

பணிச்சூழல் உள்ளிட்ட பல காரணங்களால் சிலர் சருமத்தை பராமரிக்க நேரம் இல்லாமல் அவதிபடுகின்றனர். அப்படிப்பட்டவர்கள் இந்த ஃபேஸ் பேக்கை முயற்சிக்கலாம்.

Pexels

உலர் திராட்சை எளிதாக கிடைக்கும் ஒன்று. அதை ஊற வைத்து சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும். அது அழகை அதிகரிக்கவும் உதவுகிறது. 

Pexels

ஊட்டச்சத்துகள் நிறைந்த திராட்சை சருமத்திற்கு மிகவும் நன்மை தரும். இதை  ஃபேஸ் பேக் செய்து முகத்தில் தடவலாம்.

Pexels

இரவில் தண்ணீரில் ஊற வைத்த திராட்சையை அரைத்து ஃபேஸ் பேக் உருவாக்கவும்.

Pexels

இந்த பேக்கில் சிறிது தேன் மற்றும் பால் சேர்க்கவும். இவை அனைத்தையும் நன்கு கலந்து முகத்தில் தடவலாம். சிறிது நேரம் அப்படியே விட்டு விட்டு முகத்தை கழுவவும்.

Pexels

இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்து பயன்படுத்தலாம். சில நாட்களில் சருமம் மிருதுவாகும்.

Pexels

இந்த ஃபேஸ்பேக்கை உங்கள் முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் பேட்ச் டெஸ்ட் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஒவ்வாமை அல்லது தோல் பிரச்சனைகள் இருந்தால் பயன்படுத்த வேண்டாம். 

Pexels

ஜூலை 08-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்