சுக்கிரன் வக்கிர நிவர்த்தி மூலம் அதிர்ஷ்ட பலன்களை பெறுகின்ற ராசிகள்
Canva
By Suriyakumar Jayabalan May 07, 2025
Hindustan Times Tamil
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். அதனால் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வரக்கூடியவர் சுக்கிரன்.
Canva
சுக்கிரன் காதல், ஆடம்பரம், செல்வம், செழிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் ரிசபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். சுக்கிரன் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார் இது குரு பகவானின் சொந்தமான ராசியாகும்.
Canva
மீன ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்து வந்த சுக்கிரன், கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று வக்கிர நிவர்த்தி அடைந்தார். சுக்கிரனின் வக்கிர நிவர்த்தி அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்ட பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.
Canva
மேஷ ராசி: உங்கள் ராசியில் பன்னிரண்டாவது வீட்டில் சுக்கிரன் வக்கர நிவர்த்தி அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. வீட்டு செலவுகள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகும் என கூறப்படுகிறது.
Canva
ரிஷப ராசி: உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சுக்கிரன் வக்கிர நிவர்த்தி அடைந்துள்ளார். இந்த காலகட்டம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது.
Canva
மிதுன ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் வக்கிர நிவர்த்தி அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Canva
பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.
Canva
சில ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு இருக்கும். இதனால் மன உளைச்சலும் ஏற்படும்.