ஜோதிடத்தை பொருத்தவரை ராகு கேது என்றாலே பயம்தான். நிழல் கிரகமான ராகு பகவான் அசுப கிரகமாக பார்க்கப்படுகிறார். ஆனால் ராகு பகவான் பல நற்பலன்களை தருவார் என பலருக்கும் தெரியாது.
யார் மீது அதிக கோபம் கொள்கிறாரோ அவர்களுக்குத்தான் கஷ்டம் கொடுப்பார். ஆனால் ராகு பகவானுக்கு பிடித்த சில ராசிகள் உள்ளன. அவர்களுக்கு எப்போதும் நல்ல பலன்களை அள்ளிக் கொடுப்பார்
ராகு பகவான் ஒரு ஜாதகத்தில் திசை திரும்பினால் 18 ஆண்டுகள் பயணம் செய்வார். அவர் பயணம் செய்யும் வீட்டிற்கு ஏற்றார் போல் பலன்களை கொடுப்பார்.
விருச்சிக ராசி
ராகு பகவானுக்கு மிகவும் பிடித்த முதல் ராசி இதுதான். ராகு பகவானின் ஆசிகள் எப்போதும் இந்த ராசிக்கு உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் உள்ளிட்டவற்றின் முன்னேற்றம் தருவார்.
சிம்ம ராசி
ராகு பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகளில் இதுவும் ஒன்று. வாழ்க்கையில் எத்தனை பெரிய சிக்கல்கள் வந்தாலும் அதனை சமாளிக்க கூடிய திறனை கொடுப்பார். அடுத்தடுத்த வெற்றிகளை உங்களுக்கு தெரியாமலேயே செய்து கொடுப்பார்.