குரு பகவானால் பலன் பெறும் ராசிகள்

By Suriyakumar Jayabalan
Aug 04, 2023

Hindustan Times
Tamil

தனுசு ராசி

குருவின் வக்ரப் பெயர்ச்சியால் உங்களுக்கு நன்மை கிடைக்கும். தனுசு ராசியில் ஐந்தாம் வீட்டில் குரு பகவான் வக்ரப் பெயர்ச்சி அடையப் போகிறார். குழந்தை பாக்கியம் உண்டாகும். திருமண பாக்கியம் உண்டாகும். உங்கள் ராசியின் நான்காம் வீட்டின் அதிபதியாக விளங்கக்கூடிய இவர் சொத்து மற்றும் வாகனம் வாங்குவதற்கான அதிக வாய்ப்புகளை உண்டு பண்ணப் போகிறார்.

கடக ராசி

குரு பகவானின் வக்ர பெயர்ச்சி உங்கள் ராசியில் கர்மாவில் நிகழப் போகின்றது. உங்கள் ராசியின் ஆறு மற்றும் ஒன்பதாம் வீடுகளில் அதிபதியாக விளங்கக்கூடிய குருபகவான். பல்வேறு விதமான முன்னேற்றங்களை கொடுப்பதோடு தொழில் மற்றும் வியாபார சம்பந்தமான விஷயங்களில் லாபத்தை அதிகரிக்க போகிறார். பணவரவில் எந்த குறையும் இருக்காது. 

சிம்ம ராசி

உங்கள் ராசியின் ஐந்து மற்றும் எட்டாம் வீடுகளின் அதிபதியாக குருபகவான் விளங்குகிறார். பெற்ற பிள்ளைகளின் மூலம் நல்ல செய்திகள் உங்களைத் தேடி வரும். ஆய்வில் ஈடுபடுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் நிவர்த்தி அடையும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது.

 ’சூரியனின் ராஜகுணம் அப்படியே இருக்கும்!’ உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!