புதாதித்ய யோகத்தால் சகல நன்மைகளையும் பெறுகின்ற 3 ராசிகள்
Canva
By Suriyakumar Jayabalan May 06, 2025
Hindustan Times Tamil
நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடம் மாற்றத்தை செய்வார்கள் என்று அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் தற்போது சூரிய பகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
Canva
நவகிரகங்களில் இளவரசனாக விளங்கக்கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் அனைத்தும் சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் மே மாதம் ஏழாம் தேதி அன்று அதாவது நாளை புதன் பகவான் மேஷ ராசியில் நுழைகின்றார்.
Canva
மேஷ ராசியில் புதன் மற்றும் சூரியன் இவர்கள் இருவரும் இணைகின்ற காரணத்தினால் புதாகித்ய யோகம் உருவாக உள்ளது. இந்த யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Canva
கும்ப ராசி: புதாதித்ய யோகம் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் இந்த யோகம் உருவாகின்ற காரணத்தினால் உங்களுக்கு நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.
Canva
மகர ராசி: சூரியன் புதன் சேர்ந்து உருவாக்கும் புதாதித்ய யோகம் உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் உருவாகின்றது. இதனால் உங்களுக்கு புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. வாழ்க்கை துணையோடு அதிக நேரம் செலவிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
Canva
துலாம் ராசி: புதாதித்ய யோகம் உங்களுக்கு நல்ல மாற்றங்களை வாழ்க்கையில் கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் யோகம் உருவாகும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்கள் உண்டாகும் என கூறப்படுகிறது.
Canva
பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.
Canva
சனி பகவான் ஒரு நீதிமான், துலாம் ராசியில் அவர் உச்சம் அடைவார். கும்பம், மகரம் ராசிகளில் அவர் ஆட்சி ஆவார். மேஷ ராசியில் அவர் நீச்சம் அடைவார்.