சனிபகவான் ராஜயோகம் இந்த ராசிகளுக்கு தான்

By Suriyakumar Jayabalan
Aug 28, 2023

Hindustan Times
Tamil

ரிஷப ராசி

சுதந்திரமாக இருக்க நினைக்கும் ராசிக்காரர்கள் நீங்கள். உங்கள் ராசியின் பத்தாம் வீட்டில் சனி மற்றும் சந்திரன் சேர்க்கை நிகழ உள்ளதால் வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். மன அழுத்தம் ஏற்பட்டு தன்னம்பிக்கை குறைய அதிக வாய்ப்பு உள்ளது. 

கடக ராசி

உங்கள் ராசிகள் எட்டாம் வீட்டில் சேர்க்கை நிகழ உள்ள காரணத்தினால் பல்வேறு விதமான ஏற்றத்தாழ்வுகள் உங்கள் வாழ்க்கையில் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பேசும்போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். 

கும்ப ராசி

உங்கள் ராசியில் சந்திரன் மற்றும் சனியின் சேர்க்கை முதல் வீட்டிலேயே நிகழ உள்ள காரணத்தினால் உயர் மன அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எந்த வேலையை தொடங்கினாலும் அதில் சில சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. திருமணமாகாமல் வரன் தேடுபவர்களுக்கு கொஞ்சம் காலதாமதம் உண்டாகும் எனக் கூறப்படுகிறது. 

 ’சூரியனின் ராஜகுணம் அப்படியே இருக்கும்!’ உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!