மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய ஊர்வசி ரவுத்தேலா படங்கள்! என்ன படம் என்ன ஓடிடி லிஸ்ட் இதோ..

By Malavica Natarajan
Feb 25, 2025

Hindustan Times
Tamil

பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரைப்பட நடிகையும் முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றவருமான ஊர்வசி ரவுத்தேலா பிப்ரவரி 25 2025 ஆம் தேதியான இன்று தனது 31வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 

அவரது பிறந்தநாளில், ஊர்வசி ரவுத்தேலா நடித்த முக்கியமான சில திரைப்படங்கள் குறித்து நாம் பார்க்கலாம். 

2025 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு படம் டாகு மகராஜ். இந்தப் படத்தில் ஊர்வசி ரவுத்தேலா இன்ஸ்பெக்டர் ஜானகி எனும் கதாபாத்திரத்தி்ல் நடித்திருப்பார்.  இப்படம் நெட்பிளிக்ஸில் கிடைக்கிறது. 

தமிழில் லெஜண்ட் சரவணா ஹீரோவாக அறிமுகமான முதல் திரைப்படம் லெஜண்ட். இந்தப் படத்தில் ஊர்வசி ரவுத்தேலா டாக்டர் மதுமிதா எனும் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். இந்தப் படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் கிடைக்கிறது. 

2018 ஆம் ஆண்டு வெளியான  செக்ஸுவல் த்ரில்லர் திரைப்படம் ஹேட் ஸ்டோரி. இந்தப் படத்தில் தன் சகோதரியின் கொலைக்கு பழிவாங்க துடிக்கும் நபராக ஊர்வசி நடித்திருப்பார்.  இந்தப் படம் அமேசான் பிரைமில் இருக்கிறது. 

காதல் டிராமா படமான சனம் ரேவில் ஊர்வசி ரவுத்தேலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்தப் படம் ஜியோஹாட்ஸ்டாரில் கிடைக்கிறது. 

திகில் கலந்த நகைச்சுவை திரைப்படமாக உருவான கிரேட் கிராண்ட் மஸ்தி எனும் திரைப்படத்தில் பேயாக நடித்திருப்பார் ஊர்வசி ரவுத்தேலா. இந்தப் படம் அமேசான் பிரைமில் உள்ளது. 

காலையில் ஒரு கப் பப்பாளி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

pexels