தமிழ்நாட்டின் சேலம், கரூர், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்கள் உள்ள பகுதிகள் கொங்கு எனக் கூறப்படுகிறது. இங்கு செய்யப்படும் தனிப்பட்ட சமையல் ருசி சிறப்பாக இருக்கும்.
By Suguna Devi P May 04, 2025
Hindustan Times Tamil
இன்று கொங்கு நாட்டு முறையில் மட்டன் பிரியாணி எப்படி செய்வது என இங்கு பார்க்கப் போகிறோம். இதற்கு என நல்ல இளம் ஆட்டுக் கறியை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
தேவையான பொருள்கள்:
ஒரு கப் பிரியாணி அரிசி
அரை கிலோ ஆட்டுக்கறி
15 சின்ன வெங்காயம்
3 தக்காளி
சிறிய துண்டு இஞ்சி
8 பல் பூண்டு
2 டேபிள்ஸ்பூன் நெய்
2 பெரிய வெங்காயம்
ஒரு கொத்து கொத்தமல்லித் தழை
ஒரு கொத்து புதினா
4 பச்சை மிளகாய்
2 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
1 எலுமிச்சை
அரை கப் தயிர்
ஒ2 ரு பட்டை
கிராம்பு
2 ஏலக்காய்
கால் கப் எண்ணெய்
தேவையான அளவு உப்பு
முதலில் கறியை நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். பின்னர் பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும். மேலும் புதினா, கொத்தமல்லித் தழையை நன்கு நறுக்கிக் கொள்ளவும். மிளகாயை இரண்டாகக் கீறவும்.
இஞ்சி பூண்டை அரைக்கவும், சின்ன வெங்காயத்தை இடிக்கவும். பாதியளவு பட்டை கிராம்பை அரைத்துக் கொள்ளவும். அடி கனமான பெரிய பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மீதி பட்டை, கிராம்பு, ஏலக்காய்யைப் போட்டுப் பொரிய விடவும்.
உடன் அதில் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறியைப் போட்டு கறி வெள்ளை நிறம் ஆகும் வரையில் வதக்கவும்.
9. மேற்கண்ட படி வதங்கியதும், புதினா, கொத்தமல்லித் தழை, தக்காளியைச் சேர்த்துக் கிளறி, மசாலாவை உடன் சேர்க்கவும்.
இப்போது சுமார் ஒன்றரை லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கறி மிருதுவாகும் வரையில் வேக வைக்கவும்.
அதுவரையில் அரிசியை நீரில் ஊறவைக்க மறக்காதீர்கள்.
இப்போது கறி நன்கு வெந்து மசாலா கெட்டியானதும் ஒன்றுக்கு ஒன்றரை வீதம் தண்ணீர் ஊற்றி உப்புப் போடவும்.
நன்கு தளதளவென கொதிக்கும் நேரத்தில் அரிசியைப் போட்டு, நெய்யைப் பரவலாக ஊற்றி மிதமான சூட்டில் கிளறவும்.
பிரியாணி வாசனை வந்த வுடன் பாத்திரத்தை கனத்த மூடியால் மூடவும். உடன் மேலே நெருப்புத் துண்டுகளைப் போட்டுப் பரப்பவும். சுமார் 10 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும்.
மேலே உள்ள நெருப்புத் துண்டுகளால் பிரியாணி நன்கு வெந்து பதமாகி காணப்படும்.
இதோ, இப்போது சூப்பரான கொங்கு பிரியாணி தயார் ஆகி இருப்பதைக் காணலாம்.
ஆட்டு இறைச்சி ஆண்மை மற்றும் கண் பார்வைக்கு அதிக அளவில் நன்மை செய்யும். இதனை வாரம் இரு முறை சாப்பிட்டு வருபவர்கள் நன்கு திடகாத்திரமான உடல் வாகை பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது.
பால் இல்லாமலே எலும்புகளை வலுவாக்கணுமா? கால்சியம் சத்து நிறைந்த இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க!