இறைச்சி சாப்பிடாதவர்களுக்கு பன்னீர் மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்றாகும். பன்னீரைக் கொண்டு பல சுவையான உணவுகளை தயாரிக்கலாம். இன்று சந்தையில் கிடைப்பது உண்மையான பன்னீர் அல்ல. இவற்றில் பல உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல பொருட்களைப் பயன்படுத்தி செயற்கையாக தயாரிக்கப்படுகின்றன.
By Suguna Devi P Apr 14, 2025
Hindustan Times Tamil
பெரும்பாலான மக்கள் புரதத்தைப் பெறுவதற்காக பன்னீர் சாப்பிடுகிறார்கள். நூறு கிராம் பனீரில் தோராயமாக பதினெட்டு கிராம் புரதம் உள்ளது. இருப்பினும், பன்னீரை விட அதிக புரதத்தைக் கொண்ட பல சைவ உணவுகள் உள்ளன.
சோயாபீன்களிலிருந்து சோயாபீன் எண்ணெய் பிரித்தெடுக்கப்பட்ட பிறகு மீதமுள்ள துணைப் பொருள் தான் சோயா துண்டுகளாகும். நூறு கிராம் சோயா துண்டுகளில் 52 கிராம் புரதம் உள்ளது.
சுண்டல் தாவர அடிப்படையிலான புரதத்தின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகும், மேலும் அவை அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகளால் நிறைந்துள்ளன. நூறு கிராம் கொண்டைக்கடலையில் 24 கிராம் புரதம் உள்ளது.
வேர்க்கடலை ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதத்தின் மூலமாகும். நூறு கிராம் வேர்க்கடலையில் தோராயமாக 25 கிராம் புரதம் உள்ளது.
பூசணி விதைகள் சூரியகாந்தி விதைகளைப் போலவே வணிக ரீதியாக உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படும் ஒரு பொருளாகும். நூறு கிராம் உலர்ந்த வறுத்த பூசணி விதைகளில் 29.84 கிராம் புரதம் உள்ளது. ஆனால் அவற்றில் கொழுப்பு அதிகமாக இருப்பதால், அவற்றை மிதமாக மட்டுமே சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.
சீட்டன் என்பது கோதுமையில் உள்ள முக்கிய புரதமான பசையத்திலிருந்து தயாரிக்கப்படும் ஒரு உணவுப் பொருள் ஆகும். நூறு கிராம் சீட்டானில் தோராயமாக 25 கிராம் புரதம் உள்ளது.
100 கிராம் பாசிப்பயறில் 6 கிராம் புரதச்சத்துக்கள் உள்ளது. இதில் வைட்டமின் இ, சி, கே ஆகிய சத்துக்கள் உள்ளன. இது இந்திய சமையலில் அதிகளவில் இடம்பெறுகிறது.
குரு பகவான் பண மழையை கொட்டுவார். அதிர்ஷ்டத்தில் மிதக்கும் யோகம் உங்களுக்கா!