ருசியான, ஆரோக்கியமான கேரட் பாயாசம் செய்வது எப்படி என்பது குறித்து இதில் பார்க்கலாம்
By Divya Sekar Mar 15, 2025
Hindustan Times Tamil
தேவையான பொருட்கள்
1. கேரட் - 5
2. நெய் - தேவையான அளவு
3. முந்திரி- தேவையான அளவு
4. உலர் திராட்சை- தேவையான அளவு
5. தேங்காய் - சிறிது அளவு
6. வெல்லம் - தேவையான அளவு
7. பால் -1கப்
8. ஏலக்காய் தூள் - சிறிதளவு
கேரட்டை துருவி நெய்யில் வதக்கி ஆறவைத்து நன்கு அரைத்துக் கொள்ளவும்
முந்திரி, உலர் திராட்சை, நறுக்கிய தேங்காய் ஒரு கை ஆகியவற்றை நெய்யில் வறுத்து கொள்ளவும்
அதனுடன் ஒரு டம்லர் தண்ணீர் வெல்லம் சேர்த்து கொதிக்க வைக்கவும். தேவைபட்டால் தண்ணீர் மீண்டும் சேர்க்கவும்
நன்கு கொதித்தவுடன் கேரட் அரைத்த கலவையை சேர்க்கவும். அதனுடன் 1 கப் பால் சேர்கவும்
கொதித்தவுடன் ஏலக்காய் தூள் சேர்க்கவும். இப்போது 5 டீஸ்பூன் நெய் சேர்த்து கிளரவும்
இப்போது சுவையான, ஆரோக்கியமான கேரட் பாயாசம் ரெடி
இதனை வாரம் ஒருமுறை செய்து அனைவருக்கும் கொடுங்கள். விரும்பி சாப்பிடுவார்கள்
கோடைக் காலத்தில் நாம் சாப்பிடும் காலை உணவே அந்த நாள் முழுவதும் தேவைப்படும் ஆற்றலை தருகிறது. கோடைக் காலத்தில் சாப்பிட எளிதான காலை உணவுகளை இங்கு காண்போம்.