உங்கள் கல்லீரலில் நச்சுத்தன்மை இருப்பதை கண்டறிய உதவும் அறிகுறிகள் இதோ!

pixa bay

By Pandeeswari Gurusamy
Apr 02, 2024

Hindustan Times
Tamil

உங்கள் கல்லீரலுக்கு நச்சுத்தன்மையுடன் இருப்பதை, உடனடியாக நச்சுக்களை நீக்க வேண்டும் என்பதை காட்டும் அறிகுறிகளை பார்க்கலாம்?

pixa bay

உங்கள் உடலில் அதிகப்படியான நச்சுகள் இருந்தால், அது கல்லீரலை செயல்பாட்டுக்கு சுமையாக இருக்கும். இதன் காரணமாக அடிக்கடி சோர்வை ஏற்படுத்தும். நச்சுகளுடன் அதன் செயல்பாடுகளைச் செய்வது கடினம் விஷயமாகும்.

Pexels

செரிமான பிரச்னைகள் நாம் சாப்பிடும் உணவுகளுடன் மட்டும் தொடர்புடையவையாக இல்லை. கல்லீரல் செயலிழப்பு இருந்தால், பித்த உற்பத்தி குறைவதால் வீக்கம், மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு ஏற்படலாம். இதனால் செரிமான பிரச்னைகளும் உருவாகும்

Pexels

அதிக திரவங்களை உட்கொள்ளாவிட்டால் சிறுநீரின் நிறம் கருமையாக மாறலாம். கல்லீரல் பிரச்னை காரணமாகவும் சிறுநீரின் நிறத்தில் மாற்றம் ஏற்படும். பிலிரூபின் அளவு சிறுநீரை கருமையாக்கும், கல்லீரலில் பிரச்னைகள் இருப்பதாக சிக்னல் கொடுக்கும்

Pexels

வயிற்று வலி பெரும்பாலும் மாதவிnக்குடன் தொடர்புடையது. வயிற்றின் மேற்பரப்பில் வலது புறம் அசௌகரியம் ஏற்பட்டால் கல்லீரல் வீக்கம் அல்லது விரிவாக்கமாக இருக்கலாம். உடனடியாக மருத்துவரை நாடுவது நலம்

Pexels

கல்லீரல் செயலிழப்பு அரிப்பு, தடிப்புகள் அல்லது முகப்பரு வடிவத்தில் வெளிப்படுத்தலாம். சருமம் சார்ந்த இந்த பிரச்னைகள் நச்சுத்தன்மையின் காரணமாக ஏற்படுகின்றன.

Pexels

கல்லீரல் பிரச்னை, வளர்சிதை மாற்றத்தை சீர்குலைத்து, எதிர்பார்த்திராத எடை இழப்புக்கு வழிவகுக்கிறது. கல்லீரலில் பிரச்சனை இருந்தால் உங்கள் உடல் ஊட்டச்சத்துக்களை செயலாக்க கடினமாக இருக்கும். இது பலவீனம் மற்றும் எடை இழப்புக்கு வழிவகுக்கும்.

Pexels

தேங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் அசத்தலான 6 பலன்கள்!

pixa bay