2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டனாக எம்எஸ் தோனி இருந்தார். அவர் தனது முதல் டி20 உலகக் கோப்பையில் கோப்பையை வென்றார். பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
2009 டி20 உலகக் கோப்பைப் போட்டியில், யூனிஸ் கான் தலைமையில், இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் கோப்பையை வென்றது.
2010 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் பால் காலிங்வுட் தலைமையிலான இங்கிலாந்து அணி முதல் கோப்பையை வென்றது.
டி20 உலகக் கோப்பையை இரண்டு முறை வென்ற ஒரே கேப்டன் டேரன் சமி. இவரது தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் 2012 மற்றும் 2016ல் பட்டம் வென்றது.
2014 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் லசித் மலிங்கா தலைமையிலான இலங்கை அணி இந்தியாவை வீழ்த்தியது.
2021 டி20 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஆரோன் பின்ச் இருந்தார்.
டி20 உலகக் கோப்பை 2022 இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து 2வது டி20 உலகக் கோப்பையை வென்றது.
Vastu Tips: வீட்டிற்குள் படிக்கட்டுகள் கட்டுவது சரியா, தவறா?