பலா பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் என்பவை, செல்களை சேதப்படுத்தும் ஃப்ரி ராடிக்கல்கள் என்ற அச்சுறுத்தும் மாலிக்கியூல்களிடம் இருந்து உங்கள் உடலில் ஏற்படும் செல்களின் சேதத்தைக் கட்டுப்படுத்தும்.
பலாப்பழத்தில் உள்ள கரோட்டினாய்ட்கள், பலாப்பழத்துக்கு அதன் மஞ்சள் நிறத்தை தருகின்றன. இது வீக்கம், இதய நோய்கள், புற்றுநோய், வயோதிகம் தொடர் கண் பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
லிக்னன்கள், இதய நோய் ஆபத்தை குறைத்து, மார்பக புற்றுநோய் ஏற்படாமல் தடுத்து, எலும்புப்புரையைப் போக்குகிறது. மெனோபாஸை தடுக்கிறது.
pixa bay
அதிகப்படியான வீக்கம், உங்களுக்கு நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது. அவை நீரிழிவு மற்றும் புற்றுநோய் ஆகியவற்றை கட்டுப்படுத்துகிறது. இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வீக்கத்தை குறைக்கிறது.
pixa bay
பலாப்பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள், குடல் இயக்கத்தை அதிகரித்து, மலச்சிக்கலைத் தடுக்கிறது. பலாப்பழத்தில் உள்ள இயற்கை குணங்கள், உங்கள் வயிற்றில் ஏற்படும் புண்களை சரிசெய்கிறது.
pixa bay
பலாப்பழம், பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள இயற்கை உட்பொருட்கள் மற்றும் பூஞ்ஜை, பாக்டீரியாக்களுக்கு எதிரானவை, தொற்றுக்களை தடுக்கிறது. பலாப்பழத்தில் உள்ள மெக்னீசியச் சத்துக்கள், உங்கள் உடல் கால்சியத்தை உறிஞ்ச உதவுகிறது. இது உங்கள் உடலில் உள்ள எலும்புகளை வலுப்படுத்தி, எலும்புப்புரை நோயை தடுக்கிறது.
ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் கிடைக்கும 7 ஆரோக்கிய நன்மைகள்