Fruits: மழைகாலத்தில் தினமும் சாப்பிட வேண்டிய பழங்கள் இதோ!

By Pandeeswari Gurusamy
Jun 19, 2024

Hindustan Times
Tamil

மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய சில பழங்களை சாப்பிட வேண்டியது அவசியம். அப்படி மழைக்காலத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டிய சில பழங்களை கீழே பட்டியலிட்டுள்ளோம்

Pexels

ஆரோக்கியமாகவும் சத்தானதாகவும் இருக்க பருவகால பழங்களை உண்ணலாம். அந்த பட்டியலை இனி பார்ப்போம்..

Pexels

செர்ரிஸ்: இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், தொற்று நோய்கள் வராமல் தடுக்கிறது. மனதிற்கு அமைதியையும் நிம்மதியையும் தரும்.

Pexels

நீல பெர்ரி:குறைந்த கலோரிகள் கொண்டுள்ளதால் இவற்றை உட்கொள்வதால் இரும்பு, ஃபோலேட், பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் போன்ற அதிக ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். இந்த பழம் மழைக்காலத்தில் வரும் சிறு நோய்களுக்கு எதிராக போராடும் தன்மை கொண்டது.

Pexels

மாதுளை:மழைக்காலத்தில் அதிகம் கிடைக்கும் பழங்களில் மாதுளையும் ஒன்று . இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இந்த மாதுளையின் விதைகளில் பல சத்துக்கள் உள்ளன.

Pexels

லிச்சி: நாம் மழைக்காலத்தில் லிச்சி பழத்தை சாப்பிட வேண்டும் . அவற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நமது உடலில் ஆற்றல் திறனை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் இது நமது உடலுக்கு தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்களை வழங்கி உடல் எடையை குறைக்க உதவுகிறது. 

Pexels

ஆப்பிள்: தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டியதில்லை என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு . அதேபோல் இந்த ஆப்பிள்கள் மழைக்காலத்தில் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது பல்வேறு வகையான மழைக்கால நோய்களில் இருந்து உங்களை விலக்கி வைக்கிறது.

Pexels

பேரிக்காய்:மழைக்காலத்தில் ஏற்படும் பல நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராட நமக்கு நிறைய வைட்டமின்கள் தேவை. இந்த பேரிக்காய்களில் அனைத்து வைட்டமின்களும் நிறைந்துள்ளன. இந்த பருவத்தில் அதிக ஈரப்பதம் இருப்பதால், ஆரம்பகால நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மழைக்காலத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகளில் இதுவும் ஒன்று.

Pexels

பப்பாளி:பப்பாளியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது . நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இது சிறந்தது. அதுமட்டுமின்றி இதில் உள்ள நார்ச்சத்து பல நோய்களுக்கு எதிராக போராடுகிறது.

Pexels

வாஸ்து சாஸ்திரத்தின்படி எந்த திசையில் தூங்குவது சிறந்தது?