வாய்விட்டு சிரிப்பதால் கிடைக்கும் பலன்கள் இதோ!

By Pandeeswari Gurusamy
May 06, 2024

Hindustan Times
Tamil

'வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்' என்பர். சிரிப்பின் பயன்கள் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி பார்ப்போம்.

pixa bay

சிரிப்பதால் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. மன அழுத்தத்துக்கு புன்னகை சிறந்த மருந்து. வாய்விட்டுச் சிரிக்கும்போது இதயத் துடிப்பு 10 முதல் 20 சதவீதம் அதிகரிக்கும்.

pixa bay

சிரிப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இரத்த ஓட்டத்தை சீராக்கும். இதயத்தையும், நுரையீரலையும் நல்ல வழியில் தூண்டும்.

pixa bay

சிரிக்கும்போது ஜீரண சக்திக்கு உதவும் நீர் நமது உடலில் அதிகம் சுரக்கிறது. இதனால் நாம் உண்ட உணவு எளிதில் ஜீரணமாகிறது.

pixa bay

சிரிக்கும்போது முகத்தில் உள்ள தசைகளின் இயக்கம் மேம்படும். முகம் முழுவதும் சீரான ரத்த ஓட்டம் ஏற்படுவதுடன், தசை நார்கள் விரிவடைந்து முகத்தின் தோற்றத்தையும் மெருகேற்றும்.

pixa bay

ஒவ்வொரு முறை சிரிக்கும்போதும் எண்டோர்பின் என்ற ஹார்மோன் வெளியாகும். இது மன அழுத்தத்தைக் குறைக்கும் சக்தி கொண்டது. இந்த ஹார்மோனின் வெளியீட்டால் உங்கள் மனது ரிலாக்ஸாகி, மனதில் ஒரு நல்ல உணர்வு எழுகிறது.

pixa bay

தூக்கமின்மை பிரச்னை உள்ளவர்கள் மனம் விட்டு சிரித்தால் தூக்கம் தானாக வரும்.

pixa bay

நாம் சிரிக்கும்போது அந்த ஆக்ஸிஜன் போதுமான அளவு நம் உடலுக்குள் செல்கிறது. இதனால் உடலில் பல நன்மைகள் உண்டாகும். 

pixa bay

கோடை கால சிறப்பான உணவுகள்