அன்னாசி பூவில் கொட்டிக்கிடக்கும் அற்புதமான மருத்துவ பலன்கள் இதோ!

pixa bay

By Pandeeswari Gurusamy
Aug 07, 2024

Hindustan Times
Tamil

அசைவ உணவு தயாரிப்புகளில் அன்னாசிப் பூவின் பங்களிப்பு இருக்காமல் இருக்காது. குருமா, பிரியாணி உள்ளிட்ட உணவுகளில் சேர்க்கப்படும் பொருட்களில் அன்னாசி பூ கட்டாயம் இடம் பெற்று இருக்கும். இதனை ஸ்டார் அனீஸ் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.

pixa bay

அன்னாசிப் பூ சேர்த்த சமையல் தொடங்கியவுடனே அக்கம்பக்கமெல்லாம் உணவின் வாசனை தூக்கலாகப் பரவுவதற்கு இந்த மசாலா ஐட்டமே காரணமாகும். இதனை பெரும்பாலானோர் உணவுகளில் மணத்தை சேர்ப்பதாகவே எண்ணிக் கொண்டு இருக்கின்றனர். ஆனால், நமது பாரம்பரிய உணவுகளில் அன்னாசி பூவிற்கும் தனியொரு இடம் உள்ளது.

pixa bay

அஞ்சறை பெட்டியில் இருக்கும் கடுகு, வெந்தயம், சீரகம் மற்றும் மஞ்சள் போன்ற பல பொருட்களுடன் அன்னாசி பூவும் இருக்கும்.

அன்னாசிப்பூவில் இருக்கும் ஆன்டி ஆக்சிடன்ட், வைட்டமின் ஏ, வைட்டமின் சி சத்துக்கள் மூலமாக உடலுக்கு நலம் கிடைக்கிறது. அன்னாசி பூ பெரும்பாலும் இந்திய மற்றும் சீன சமையல் முறைகளில் ஜீரணத்துக்காகவும், உணவு வாசனையாகவும் சேர்க்கப்படுகிறது.

Pexels

குறைந்தளவு கலோரிகள் அன்னாசிப்பூவில் இருப்பதால், உடல் பருமன் கொண்டவர்கள் உணவுடன் சேர்த்து கொள்ளலாம். முறையற்ற மாதவிலக்கை சீர்செய்ய கூடியதும், காய்ச்சல், உடல் வலியை போக்கவல்லதும், வயிறு உப்புசத்தை சரிசெய்யக்கூடிய ஆற்றலையும் அன்னாசி பூ கொண்டுள்ளது. செரிமானத்தை தூண்டும்

pixa bay

அன்னாசி பூ மணம் தரக்கூடியது. உணவாவது மட்டுமின்றி உன்னதமான மருந்தாக விளங்குகிறது. மாதவிலக்கு பிரச்னையை சரிசெய்கிறது. மாதவிலக்கை தூண்டி முறைப்படுத்துகிறது. அஜீரணக் கோளாறுகள், இதயம் பாதிப்பு, வாய் துர்நாற்றம், நுரையீரல் பாதிப்பு, சளி தொந்தரவு, உயர் ரத்த அழுத்தம், குழந்தைகளுக்கு ஏற்படும் குடல் புழுக்கள் பாதிப்பு போன்றவைகளுக்கு அன்னாசிப்பூ அருமருந்தாக உள்ளது.

pixa bay

தாய்ப்பாலை பெருக்கக் கூடிய அற்புத சக்தி உடையது. அதிக சத்துக்கள் உள்ள இது, புற்று நோய்களை உண்டாக்கும் நச்சுகளை வெளியேற்றும். சளி, இருமல் காய்ச்சலை போக்கும் நல் மருந்தாகிறது. அன்னாசி பூவை பயன்படுத்தி மாதவிலக்கு பிரச்னையை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

pixa bay

Enter text Here

pixa bay

மாதவிலக்கு பிரச்னைக்கான மருந்து செய்யத் தேவையான பொருட்கள்: அன்னாசி பூ, பெருங்காயம், பனைவெல்லம்.

pixa bay

செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர் விடவும். இதனுடன், ஒரு ஸ்பூன் பனை வெல்லம் சேர்க்கவும். லேசாக வறுத்து பொடி செய்த அன்னாசி பூ பொடி அரை ஸ்பூன் அளவுக்கு போடவும். கால் ஸ்பூன் பெருங்காயப் பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டவும்.

pixa bay

இதை தினமும் காலை வேளையில் எடுத்துவர தடைபட்ட மாதவிலக்கு பிரச்னை சரியாகும். மாதவிலக்கை சீர் செய்கிறது.

pixa bay

இளம் தாய்மார்களுக்கு பால் பெருக்கியாக விளங்கிறது. பெண்களின் கூந்தலை பராமரிக்கவும், அஜீரண கோளாறுகள், இதய பாதிப்பு, வாய் துர்நாற்றம், நுரையீரல் பாதிப்பு மற்றும் சளி தொந்தரவு போன்ற பிரச்னைகளுக்கும் தீர்வாக இருக்கிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் குடல் புழுக்கள் பிரச்னையையும் சரி செய்கிறது.

pixa bay

ரிலேஷன்ஷிப்பில் பாசமாக இருப்பது எப்படி?