இஞ்சி எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் இதோ!

pixa bay

By Pandeeswari Gurusamy
Sep 15, 2024

Hindustan Times
Tamil

காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி சாறு குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கும் என்கின்றனர் உணவு நிபுணர்கள். செரிமான கோளாறுகள், சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகளை குறைக்கிறது என்பது தெரியவந்துள்ளது.

pixa bay

இஞ்சி நமக்கு பல்வேறு நோய்களிலிருந்து விடுபட உதவுகிறது. சர்க்கரை வியாதி முதல் அஜீரணம் வரை அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது. இப்போது இந்த இஞ்சி சாறு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

pixa bay

இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு கலவையை சிறிது மிளகு தூள் மற்றும் சிறிது தேன் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் கிடைக்கும் பலன்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

pixa bay

இஞ்சி, எலுமிச்சை வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்த உதவும். இந்த சாற்றை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்று பிரச்சனைகள் குறையும். மேலும், இஞ்சி சாறு நெஞ்செரிச்சல் பிரச்சனையை குறைக்க நன்றாக வேலை செய்கிறது.

pixa bay

தசை வலி: இஞ்சி சாற்றில் ஜிஞ்சரால் உள்ளது. தசை வலியால் அவதிப்படுபவர்கள் இந்த கலவையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிரச்சனை குறையும்.

Pexels

உங்களுக்கு குமட்டல் ஏற்பட்டால்.. இந்த இஞ்சி-எலுமிச்சை சாறு கலவையும் நிவாரணம் அளிக்கும். அடிக்கடி இந்தப் பிரச்சனை இருந்தால். தினமும் எடுத்துக் கொள்ளலாம். இதனால் பிரச்சனை குறையும்.

pixa bay

இஞ்சி சாறு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு பிரச்சனைகளை குறைக்க மிகவும் உதவியாக உள்ளது. இந்த சாற்றை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் குறையும். இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

Pexels

களைப்பில் இருந்து நிவாரணம்: பலர் காலையில் எழுந்ததும் மந்தமாக உணர்கிறார்கள். ஏனெனில் உடலில் சேரும் நச்சுகள் அல்லது மாசுக்கள் சரியாக உடலில் இருந்து வெளியேறாது. அந்தச் சமயத்தில் இஞ்சிச் சாறு ஒரு நல்ல டிடாக்ஸ் டிரிங்க் ஆக செயல்படுகிறது. உடலை சுத்தம் செய்து புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும்.

Pexels

தினமும் பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்