வாஸ்துப்படி வீட்டில் குழந்தைகள் படிக்கும் அறை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
Canva
By Karthikeyan S May 29, 2025
Hindustan Times Tamil
குழந்தைகள் படிக்கும் அறையில் காற்றோட்டம் இருக்க வேண்டும். அந்த அறையின் கிழக்கிலும் வடக்கிலும் ஜன்னல் இருக்கவேண்டும் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.
Canva
படிக்கும் அறையை வடகிழக்கு பகுதியில் அமைப்பது நல்லது. ஏனெனில் இந்த திசை அறிவு, வலிமை மற்றும் சக்தியுடன் தொடர்புடையது. அதிலும் சூரியனின் ஒளிக்கதிர்கள் உள்ளே வரும் வகையில் அமைக்கப்பட்ட அறையில் படிப்பது நன்மை பயக்கும்.
Canva
குழந்தைகள் படிக்கும்போது கிழக்கு திசையை நோக்கியவாறு அமர்ந்து படிப்பதற்கு ஏற்றவாறு, டேபிள் மற்றும் நாற்காலிகளை அமைக்க வேண்டும்.
படிக்கும் அறையும், மேஜையும் எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும். படிக்க தேவையான புத்தகங்கள் மட்டுமே மேஜையின் மீது இருக்க வேண்டும்
Canva
வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் படிக்கும் அறையில் கனமான பொருள்கள் எதுவும் இருக்கக்கூடாது. இது மிகவும் முக்கியம்.
குழந்தைகளின் அறையின் நிறத்தை பொறுத்தவரை பிங்க், வெளிர் மஞ்சள் அல்லது வெளிர் பச்சை ஆகிய நிரங்கள் அதிகம் பரிந்துரைக்கப்படும் நிறமாக இருக்கிறது.
Canva
குழந்தைக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் குதிரை, சூரியன் உதிப்பது, படிப்பின் கடவுளான சரஸ்வதி போன்ற படங்களை மேற்கு திசையில் வைக்கவும். ஏனெனில் இந்த திசையில் படத்தை வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது.