வீட்டில் புழுக்கம் அதிகரித்துள்ளதா? - உங்களுக்கு சில டிப்ஸ்!

By Marimuthu M
Feb 26, 2024

Hindustan Times
Tamil

வீட்டின் மாடியில் செடி, கொடிகள் வளர்த்தால் வீட்டுக்குள் குளிர்ச்சியை உணரலாம். 

வீட்டின் மேற்கூரையில் ஒயிட் வாஷ் செய்தால் வெப்பம் வீட்டுக்குள் கடத்தப்படாது.

காலையில் 6 மணி முதல் 9 மணி வரையும் வீட்டிலுள்ள அனைத்து ஜன்னல்களையும் திறந்து வைக்க குளிர்ச்சி உருவாகும்

 பால்கனி, மாடியின் அறை, ஜன்னல்களை ஒட்டி மூங்கில் பாய்களைத் தொங்கவிட்டால் அது வெப்பத்தைத் தடுக்கும்

 வெயில் காலங்களில் வெப்பத்தை உமிழாத சி.எஃப்.எல், எல்.இ.டி பல்புகளைப் பயன்படுத்தலாம். 

மாலை நேரங்களில் வீட்டின் மேற்கூரையில் நீர் தெளித்துவிடலாம். வீட்டுக்குள் குளிர்ச்சி புகும்

அதேபோல், ஈரத்தில் நனைத்த சாக்குப் பைகளை நீரில் நனைத்து மேற்கூரையின்மீது போடலாம்.

டேபிள் ஃபேனுக்கு முன்பு, ஐஸ் கட்டி நிரப்பப்பட்ட பாத்திரத்தை வைத்தால் அது ஆவியாகி அந்த அறை முழுக்க குளிர்ச்சியைத் தரும்

யுஸ்வேந்திர சஹல் வரலாறு படைத்தார்