கடலில் வாழும் மிகப்பெரிய உயிரினங்கள் பற்றிய ஆச்சரியமான தகவல்கள் இதோ..!

By Karthikeyan S
Jan 08, 2025

Hindustan Times
Tamil

நமது நிலப்பரப்பில் 70 சதவீதத்தை கடல் சூழ்ந்துள்ளது

PEXELS

கடலின் ஆழத்தில் பிரம்மாண்டமான உயிரினங்கள் வாழ்கின்றன

PEXELS, ORIGINAL DIVING

கடற்பரப்பை ஆளும் அத்தகைய உயிரினங்களைப் பற்றிய சில ஆச்சரியமான தகவல்கள் இதோ..

PEXELS

ப்ளூ வேல்ஸ்: இந்த நீல திமிங்கலங்கள் 100 அடி நீளம் வரை வளரக்கூடியவை. இவை கடல் உயிரினங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களிலும் மிகப் பெரியவை.

PINTEREST

தெற்கு யானை சீல்: இது கடலுக்குள் இருக்கும் ஒரு பெரிய உயிரினம். ஆண் சீல்கள் 20 அடி நீளமும் 40 டன் எடையும் கொண்டவை. 

PINTEREST

லெதர்பேக் கடல் ஆமை: 7 அடி நீளமும் 2,000 பவுண்டுகள் எடையும் கொண்ட லெதர்பேக் கடல் ஆமை, அனைத்து ஆமை இனங்களிலும் மிகப்பெரியது. இவை உணவைத் தேடி கடலுக்குள் 1,300 மீட்டருக்கும் அதிகமான ஆழத்திற்குச் செல்கின்றன.

PINTEREST

பெரிய ஸ்க்விட்: இவை பூமியில் உள்ள மிகப்பெரிய முதுகெலும்பற்ற விலங்குகள். இது சுமார் 46 அடி நீளம் வரை வளரக்கூடியது. அவற்றின் எடை 1,100 பவுண்டுகள் வரை இருக்கும். இவை விலங்குகளில் மிகப்பெரிய கண்களைக் கொண்டுள்ளன. அவற்றின் கண்கள் 10 அங்குலம் வரை பெரியவை. 

PINTEREST

ஜப்பானிய சிலந்தி நண்டுகள்: இந்த நண்டுகளுக்கு பத்து கால்கள் உள்ளன. இவற்றின் கால்கள் 12 அடி வரை இருக்கும். அவற்றின் எடை 40 பவுண்டுகள் ஆகும்.

PINTEREST

உடல் எடையை குறைக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்