Nervous System Health: நரம்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவும் அற்புத உணவுகள்!

pixa bay

By Pandeeswari Gurusamy
Feb 08, 2024

Hindustan Times
Tamil

பல்வேறு வகையான உடல் இயக்கத்துக்கு வைட்டமின் பி12 தேவைப்படுகிறது. இதில் அதற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. நரம்பு ஆரோக்கியம், டிஎன்ஏ வளர்ச்சி மற்றும் ரத்த சிவப்புணுக்கள் உருவாக்க என உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கும் உதவுகிறது. 

pixa bay

கேரட்டில் அதிகளவில் வைட்டமின் பி12 சத்துக்கள் இல்லாவிட்டாலும், இது இந்திய உணவுகளில் மிகவும் பிரபலமான ஒன்று. இதில் ஊட்டச்சத்துக்கள் நிறைய உள்ளது. இதில் பீட்டா கரோட்டின் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இதில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் நார்ச்சத்துக்கள் உங்களின் ஒட்டுமொத்த உடல் வளர்ச்சிக்கும் உதவுகிறது. அது உங்களுக்கு சிறிதளவு வைட்டமின் பி12ஐயும் கொடுக்கிறது.

pixa bay

வாழைப்பழத்தில் வைட்டமின் பி12 சத்து அதிகம் இல்லை. ஆனால் இது உலகம் முழுவதும் இதன் பொட்டாசிய சத்துக்காக அதிகளவில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. உங்கள் உணவில் வாழைப்பழத்தை எடுத்துக்கொள்வது உங்களுக்கு இனிப்பு சுவையை கொடுக்கிறது. மேலும், வைட்டமின் பி12 போன்ற உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

pixa bay

உருளைக்கிழங்குகள், இந்திய உணவுகளில் அதிகம் இடம்பெறும் ஒன்றாகும். குழந்தைகள் அதிகளவில் எடுத்துக்கொள்ளும் உணவாகவும் இது உள்ளது. இதில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. இதில் வைட்டமின் பி12 சத்தும் அதிகம் உள்ளது. இவற்றை நீங்கள் உணவில் எடுத்துக்கொண்டால், அது ஊட்டச்சத்து மற்றும் சுவை இரண்டையும் வழங்குகிறது.

pixa bay

பீட்ரூட்டில் வைட்டமின் பி12 சத்து அதிகம் உள்ளது. இதன் நல்ல நிறம், நம்மை கவர்வதற்காக கிடையாது. இதில் எண்ணிலடங்கா ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை நீங்கள் சாலட்கள் மற்றும் ஸ்மூத்திகள் மற்றும் காய்கறி அல்லது பழச்சாறுகளிலும் சேர்த்துக்கொள்ளலாம். உங்கள் சருமத்துக்கும் நன்மை கொடுக்கிறது.

pixa bay

ஆரஞ்சில் வைட்டமின் பி12 உள்ளது என்று பெரும்பாலானோருக்கு தெரியாது. ஏனெனில் இது வைட்டமின் சி உணவாக மட்டும் அதிகளவில் பார்க்கப்படுகிறது. ஆனாலும் அவை ஒட்டுமொத்த உடல் வளர்ச்சிக்கும் அது உதவுகிறது. வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆரஞ்சு பழம் சரிவிகித உணவுக்கு நல்ல தேர்வு. உங்களுக்கு தேவையான தினசரி ஊட்டச்சத்து அளவுகளை ஆரஞ்சு பூர்த்தி செய்கிறது.

pixa bay

காலிஃப்ளவரில் மிதமான அளவு வைட்டமின் பி12 சத்து உள்ளது. மேலும் இதில் உடலுக்கு தேவையான மற்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. இதை பிரியாணி, குருமா, வறுவல் என எது வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். இந்த காயை மேலும் சூப் உள்ளிட்ட நிறைய உணவுகள் செய்து சாப்பிடலாம்.

pixa bay

ஆப்பிளில் மிதமான அளவில் வைட்டமின் பி12 சத்து உள்ளது. அது உங்கள் உடலுக்கு சிறிதளவு நன்மையைக்கொடுக்கிறது. இதை நீங்கள் ஸ்னாக்ஸாக எடுத்துக்கொள்ளலாம். 

pixa bay

காளான் உங்கள் உணவில் கார சுவைக்காக மட்டும் பயன்படுத்தப்படும் உணவு கிடையாது. இதில் அதிகளவில் வைட்டமின் பி12 சத்து உள்ளது. தாவர உணவுகளை மட்டுமே விரும்பி சாப்பிடுபவர்களுக்கு இது நல்ல தேர்வு. இதில் பல்வேறு நன்மைகளையும் உடலுக்கு அளிக்கிறது.

pixa bay

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்