மாம்பழ சீசன் தொடங்கி இருக்கும் நிலையில், சரியான மாம்பழத்தை தேர்ந்தெடுப்பது சில நேரங்களில் சவாலாக இருக்கலாம். எனவே உங்களுக்காக சில பயனுள்ள குறிப்புகள் இதோ..!

Canva

By Karthikeyan S
Apr 13, 2025

Hindustan Times
Tamil

100 கிராம் மாம்பழத்தில் 765 இன்டர்நேஷனல் யூனிட் வைட்டமின் ஏ உள்ளது.  இதுதவிர, வைட்டமின் ஏ, பி6, சி, இ ஆகியவை நிறையவே உள்ளன. எனவே அவற்றை சரியாக தேர்வு செய்வது முக்கியம்.

Canva

அனைத்து வகை மாம்பழங்களையும் தட்டிப் பார்த்து வாங்கலாம். தட்டும்போது சத்தம் சற்று குறைந்திருந்தாலோ, சத்தம் கேட்காமலேயே இருந்தாலோ அழுகியது அல்லது அதிகம் கனிந்தது என்று அர்த்தம்.

Canva

மாம்பழத்தின் உள்ளே காணப்படும் ஆரஞ்சு மற்றும் சிவப்பு கலந்த நிறம் இயற்கையானது. வெறும் மஞ்சள் நிறச் சதையுள்ள பழம் என்றால், அது ரசாயனம் மூலம் செயற்கையாக பழுக்கவைக்கப்பட்டது எனப் புரிந்துகொள்ளலாம். 

Canva

சரியான வடிவத்தில் இருக்கும் மாம்பழங்களை தேர்வு செய்ய வேண்டும். மிகவும் தட்டையான அல்லது ஒழுங்கற்ற வடிவத்தில் இருக்கும் மாம்பழங்கள் சரியாக பழுத்திருக்காது.

Canva

மாம்பழத்தின் தோலில் பெரிய கறைகள், வெடிப்புகள் இருக்கிறதா என்று கவனமாக பாருங்கள். சிறிய கறுப்பு புள்ளிகள் இருக்கலாம், ஆனால் பெரிய கறைகள் இருந்தால் அந்த மாம்பழத்தை தவிர்க்கவும்.

Canva

மாம்பழம் வாங்கும் போது அதன் காம்பு காய்ந்து போகாமல், பச்சை நிறத்தில் இருக்கிறதா என்று பாருங்கள். காம்பை சுற்றி பிசுபிசுப்பு இருந்தால், அது நன்றாக பழுத்திருப்பதற்கான அறிகுறி.

Canva

மாம்பழம் எந்த சீசனில் அதிகமாக கிடைக்கும் என்பதை அறிந்து கொண்டு வாங்கினால், நல்ல தரமான மற்றும் குறைந்த விலையில் மாம்பழங்களை பெறலாம்.

Canva

இன்றைய தங்கம் விலை நிலவரம்: ‘மீண்டும் ஏற்றம்..’ ஏப்ரல் 18, 2025 தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!