உடல் எடை குறைக்க விரும்புவோர் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டிய மூலிகை வகைகளை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman Apr 13, 2024
Hindustan Times Tamil
பீட்டாக இருக்க வேண்டுமானால் உடல் எடையை பேனி பராமரித்தல் மிகவும் அவசியமாகும். எடை குறைப்புக்கு உதவும் சில மூலிகை வகைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
குடம்புளி
மலபார் டாமரிண்ட் என்று அழைக்கப்படு்ம குடம்புளி சிட்ரிக் அமிலம் நிறைந்து காணப்படுகிறது. இவை வயிறு நிரம்பிய உணர்வை நீண்ட நேரம் தந்து தேவையற்ற கொழுப்புகளை நீக்குவதோடு உடல் எடை குறைப்புக்கும் வழிவகுக்கிறது
க்ரீன் டீ
இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், கேட்சின்ஸ் உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்க உதவுவதோடு, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்து எடை குறைப்புக்கு வழிவகுக்கிறது
புதினா
பெப்பர்மிண்ட் என்று அழைக்கப்படும் புதினா செரிமானத்தை ஊக்கப்படுத்தி, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கி எடை குறைப்புக்கு உதவுகிறது
திரிபலா
கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகிய மூன்றின் கலவையே திரிபலா என்று அழைக்கப்படுகிறது. இவை செரிமானத்தை மேம்படுத்தி உடல் எடையை குறைக்க செய்கிறது
வெந்தய கீரை
செரிமானத்துக்கு நன்மை தரும் வெந்தய கீரை, வளர்சிதை மாற்றத்தை ஊக்கப்படுத்துகிறது. நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் பசி உணர்வை கட்டுப்படுத்தி உடல் எடையை இழக்க செய்கிறது
மக்காச்சோளம் சாப்பிடுவதால் கிடைக்கும் 6 முக்கிய பலன்கள் இதோ!