நாள் முழுவதும் ஆற்றலை இழக்காமல் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் ஸ்நாக்ஸ் எவை என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
May 16, 2024

Hindustan Times
Tamil

உங்களது டயட்டில் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் சேர்த்து கொண்டால் பசியை கட்டுப்படுத்துவதுடன், தேவையில்லாமல் உணவுகள் கொரிப்பதை தவிர்க்கலாம்

கொண்டகடலை

அடிப்படை ஊட்டச்சத்துகளான போலேட், நார்ச்சத்து, இரும்புசத்து நிறைந்திருக்கும் கொண்டகடலை ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இதை ரோஸ்ட் செய்தோ அல்லது பிற சாலட்களில் கலந்தோ சாப்பிடலாம்

நட்ஸ்

வால்நட், நிலக்கடலை, பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகளில் நிறைவுறாத கொழுப்பு அமிலங்கள், இதர ஊட்டச்சத்துகள் நிறைந்திருப்பதால் நாள்முழுவதும் ஆற்றலுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது

காட்டேஜ் சீஸ்

புரதம் நிறைந்த காட்டேஜ் சீஸ் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி12 நிறைந்துள்ளது. பசியை அடக்க உதவும் இதை பல்வேறு வகைகளில் எடுத்துக்கொள்ளலாம்

பூசணி விதைகள்

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், அடிப்படை தாதுக்கள் நிறைந்து காணப்படும் பூசணி விதைகளை ரோஸ்ட் செய்து உப்பு சேர்த்து சாப்பிடலாம்

ஹம்முஸ்

சுண்டலை வைத்து தயார் செய்யக்கூடிய ஹம்முஸ் பல்வேறு வகையான உணவுகளுடன் சேர்ந்த் சாப்பிடலாம். இதில் நார்ச்சத்து, தாதுக்களான மாங்கனீசு, தாமிரம், போலேட் ஆகியவை நிறைந்துள்ளன

ஆரோக்கியமான நல்வாழ்வுக்கு டயட், உடற்பயிற்சி, நல்ல தூக்கம் ஆகியவற்றுடன் சமையலுக்கு நாம் தேர்வு செய்யும் எண்ணெய் வகையும் முக்கிய பங்காற்றுகிறது