படுத்தவுடன் நல்ல தூக்கம் வருவதற்கு தவறாமல் கடைப்பிடிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. அவை பற்றி தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Jan 03, 2024

Hindustan Times
Tamil

ஒட்டு மொத்த உடல் நல ஆரோக்கியத்துக்கும் நேர்மறையான வாழ்க்கை முறைக்கும் நல்ல இரவு நேர தூக்கம் முக்கிய பங்களிப்பை தருகிறது 

உடல் சார்ந்த செயல்பாடுகளை தவறாமல் செய்தல்

நாள்தோறும் தவறாமல் உடல் சார்ந்த செயல்பாடுகளை செய்ய வேண்டும். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்றவற்றுக்கு போதிய நேரத்தை ஒதுக்கி அதை செயல்படுத்துவதன் மூலம் நல்ல தூக்கத்தை பெறலாம்

சூரிய ஒளியை போதுமான அளவில் பெறுதல்

இயற்கையாக கிடைக்கும் சூரிய ஒளியில் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது. இவை உங்கள் உடலின் சர்காடியன் சுழற்சியை சீராக வைத்து நல்ல தூக்கத்தை பெற உதவுகிறது

தாமதமாக சாப்பிடுவதை தவிர்த்தல

பசியுடனும், வயிறு முழுக்க நிரம்பிய நிலையிலும் படுக்கைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இந்த இரண்டு செயல்களும் தூக்கத்தை பாதிக்கும். தூங்குவதற்கு சில மணி நேரம் முன்பாகவே சாப்பிட வேண்டும். தூங்குவதற்கு முன் கண்டிப்பாக கஃபைன், நிக்கோடின் சார்ந்தவற்றை எடுத்துக்கொள்ள கூடாது

படுக்கையறை சூழலை தூங்குவதற்கு உகந்தவாறு மாற்றுதல்

ஆழந்த தூக்கத்தை பெறுவதற்கு படுக்கையறை சூழலும் முக்கிய பங்காற்றுகிறது. எனவே உங்கள் படுக்கையறையை குளிர்ச்சியாகவும், இருள் நிறைந்தும், போதிய இடம் இருக்கும் விதமாகவும் வைத்து கொள்ள வேண்டும்

ரிலாக்ஸாக இருப்பதை கற்றுக்கொள்ளுதல்

மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள தூக்கத்துக்கு முன்னர் தியானம் செய்யும்  பழக்கத்தை கடைப்பிடிக்கலாம். இது மனதை அமைதிப்படுத்தி ஆழந்த தூக்கத்தை பெற உதவும்

சியா விதைகளில் உள்ள சத்துக்கள் பற்றி பார்ப்போம்